New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/06/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/
கபாலியால் கவலையில் இருக்கும் இயக்குநர் ரஞ்சித்?
ஒரு பக்கம் ‘கபாலி’ படத்தை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கபாலியை நினைத்து பயந்து கொண்டிருக்கிறாராம் இயக்குநர் ரஞ்சித். ஏன் என்று விசாரித்தால் எல்லாம் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு தான் என்கிறார்கள். கடந்த மாதம் வெளியான கபாலி டீஸர் இந்தியாவிலேயே பெரும் சாதனை படைத்தது. இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்கிறார்கள்.
அதோடு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வெளியான கபாலி பாடல் டீஸருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு படத்தின் பாடல் டீஸருக்கு இப்படி ஒரு வரவேற்பு என்றால் அது கபாலிக்கு தான் என்கிறார்கள். ஆக நாளுக்கு நாள் கபாலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. இதுதான் ரஞ்சித்துக்கு பயத்தை கொடுத்துள்ளதாம்.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், “கபாலி படத்திற்கு நாளுக்கு நாள் கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இது எனக்கு கொஞ்சம் பயத்தை உண்டாக்கியுள்ளது. காரணம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நான் கடுமையாக உழைக்க வேண்டும். கபாலி படம் நியாயத்திற்காக போராடும் கதையாக இருக்கும், இதில் ரஜினி மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்” என்றார். மேலும் “படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனேகமாக ஜுலை இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய முயற்சி செய்வோம்” என்றும் கூறினார்.