New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/04/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%81/
அஜித்- சிம்பு பிரச்சனை குறித்து விஷால் அதிரடி பதில்!
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி வெற்றிகரமாக நடந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஷால், “இந்த நட்சத்திர கிரிக்கெட் மிகச் சிறந்த முறையில், வெற்றிகரமாக நடந்தது. நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விஷயம். இந்தப் போட்டியில் வசூலான தொகையில், நடிகர் சங்கத்துக்கு இருந்த அத்தனைக் கடன்களையும் அடைத்துவிட்டோம். இப்போது கைவசம் ரூ 8 கோடி உள்ளது.
நடிகர் சங்கக் கட்டடம் கட்ட மொத்தம் ரூ 28 கோடி தேவைப்படுகிறது. இப்போதுள்ள தொகையைக் கொண்டு கட்டடத்தின் ஆரம்பப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். எனவே மீதிப் பணத்துக்கு நடிகர் சங்கம் சார்பில் படமெடுக்கப் போகிறோம். அந்தப் படத்தில் வரும் பணத்தைக் கொண்டு கட்டட வேலைகளை முழுமையாக முடித்துவிடுவோம்,” என்றார்.
அஜித்துக்கும் உங்களுக்கும் இடையே என்ன பிரச்சினை? என்று கேட்டபோது, “அஜித்துக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர கிரிக்கெட் என்றல்ல… நடிகர் சங்கத்தின் வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் நீண்ட வருடங்களாக கலந்து கொண்டதே இல்லை. அப்படி இருக்கும்போது, நட்சத்திர கிரிக்கெட்டை மட்டும் வைத்துப் பேசுவது சரியல்ல. மேலும், நாங்கள் யாரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் மீடியாவில் சிலர்தான் நான் சொல்லாதவற்றையெல்லாம் எழுதி பிரச்சினையாக்கி விட்டார்கள்,” என்றார் விஷால்.
நட்சத்திர கிரிக்கெட்டைப் பார்க்க ஆட்களே வரவில்லையே.. அது தோல்விதானே? என்று கேட்டதற்கு பதிலளித்த விஷால், “உண்மையில் மக்களை இந்த நிகழ்ச்சிக்கு திரட்ட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. காரணம் கடைசி மூன்று நாட்கள் இருக்கும்போதுதான் மைதானம் எங்கள் கைக்கு வந்தது. போலீஸ் கெடுபிடி அதிகம். எனவே அதிக விலை டிக்கெட்டுகளை அடித்து, வர முடிந்தோர் மட்டும் வந்தால் போதும் என்று நினைத்தோம்.
உண்மையில் நாங்களே எதிர்ப்பாராத அளவுக்கு கூட்டம் கூடிவிட்டது. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க வேண்டும். அது சன் டிவியில் ஒளிபரப்பாக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். கூட்டம் பற்றி கவலைப்படவில்லை. அந்த வகையில் நட்சத்திரக் கிரிக்கெட் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது,” என்றார்.
சிம்பு நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் என்று சொன்னாரே? என்று கேட்டபோது, “நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப் அல்லது லீக் கிளப்போ (League Club) அல்ல. எங்களுக்கே சிம்பு விலகுகிறேன் என்பது புதிதாக இருக்கிறது. ஆனால் அவருடைய கருத்தை மதிக்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு சிம்புவை ஒரு நடிகராகவும், தோழராகவும் பிடிக்கும். அவர் அப்படி பேசியதைத் தவிர்த்திருக்கலாம்” என்றார்.
இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, “எங்களுக்கென்று எந்த நிலைப்பாடும் இல்லை. கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டது நடிகர் சங்கம். எங்களுக்கு அனைவருமே வேண்டும். எந்தக் கட்சிக்கு வோட்டுப் போட்டாலும் பரவாயில்லை.. ஆனால் 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும். எனவே அனைவரும் வாக்களியுங்கள்,” என்றார்.