''இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என கண்ணீருடன் அழைப்பிதழை தந்தார் வனிதா. ஸ்னோலினின் முதலாமாண்டு நினைவேந்தலுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழை கொடுத்தார் அவரது தாய் வனிதா. அதில், வீட்டுக்காக 2000ல் பிறந்த ஸ்னோலின் நாட்டுக்காக 2018ல் மறைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. - - ஸ்னோலினின் இழப்பை அடுத்து, ஒரு விஷயம் அவரது வீட்டில் மாறியுள்ளது. இல்லத்தரசியாக மட்டுமே இருந்து வந்த வனிதா, தற்போது தன்னைச் சுற்றி, தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள், வன்முறை சம்பவங்கள், அரசியல் குழப்பங்கள் என எல்லா செய்திகளை கூர்ந்து கவனித்துவருகிறார். ''இப்போதெல்லாம், எல்லா செய்திகளையும் பார்க்கிறேன். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவேண்டும் என கற்றுக்கொடுத்துவிட்டாள் என் மகள். என்னை சந்திக்க எத்தனையோ பேர் வருகிறார்கள். என் மகளைப் பற்றி பேசுகிறார்கள். அவளது தியாகத்தை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கை எனக்கு புதிது. உலகம் முழுவதும் பல சொந்தங்களை எனக்கு என் மகள் அள்ளித்தந்துவிட்டு போய்விட்டாள்,''என்கிறார் வனிதா. - பிபிசி தமிழுக்காக Pramila Krishnan எழுதியதிலிருந்து...கண்ணீர் பொங்கவைத்த சில வரிகள். #WeRememberTuticorinMassacre #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bxxb_HKBY1b/?igshid=wojignjvcths