வயிற்றிலும், சிறுகுடலின் மேல் பகுதியிலும் ஏற்படும் புண் அல்சர் எனப்படும். இரண்டுக்கும் அறிகுறிகள் வேறு வேறு. அதில் ஒன்று எப்போது வலி ஏற்படுகிறது என்பது.
சிறுகுடலின் மேல் பகுதியில் அல்சர் இருந்தால் வயிறு காலியாக இருக்கும்போது வலி ஏற்படும். அதாவது பசி எடுக்கும்போது வலி ஏற்படுகிறது. இந்த வலி பெரும்பாலும் மாலை நான்கு மணியளவிலும் அதிகாலை நான்கு மணியளவிலும் அதிகமாக ஏற்படுகிறது. சிறுகுடலில் அல்சர் இருப்பவர்கள் இதனால் அதிகமாக சாப்பிடுவார்கள். இதன் காரணமாக அவர்கள் எடை கூடுகிறது.
ஆனால் வயிற்றுப் பகுதியில் அல்சர் இருந்தால் சாப்பிட்டவுடன் வலி ஏற்படுகிறது. ஏனென்றால் சாப்பிட்டவுடன் செரிமானநீர் அதிகப்படியாக சுரந்து வயிற்றுப்புண்ணின் மேல் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இதனால் பொதுவாக வயிற்றுப்புண் இருப்பவர்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வதால் உடல் எடை குறைகிறது.