வேலன்டைன்ஸ் டே
ஒருநாள் வேலன்டைன்னு ஒருத்தரு தன்னோட காதல சொல்றதுக்காக கிளம்பி பஸ் ஸ்டாப்க்கு வந்தாரு. அப்போ பாத்து டிக்கெட் விலைய ஏத்திட்டாங்க. அந்த அளவுக்கு அவரு வசதி படைச்ச ஆளா இல்லாததால கைல இருந்த காசுக்கு ரோஜா பூவ வாங்கிட்டு நடந்தே போனாரு. ரொம்ப நேரம் ஆனதால அவரோட காதலி அங்க இருந்து போய்ட்டாங்க. அவர் தன்னோட காதல சொல்ல முடியாம, மனசு நொந்து செத்து போய்ட்டாரு. மத்தவங்க யாரும் அந்த மாதிரி சொல்லாம போய்ட கூடாதுனு, அந்த நாள காதல சொல்ற நாளா 'காதலர் நாளா' அறிவிச்சுட்டாங்க...
பின்குறிப்பு : அந்த வேலன்டைன் யாரும் இல்ல, நம்ம வேலுடைய 'வேலன்' முருகனே!!!
-சந்திரன்













