ஆகாஷ் பாஸ்கரனின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: வேகமான வளர்ச்சி மற்றும் சந்தேகங்கள்
படத்தயாரிப்பாளரும், வணிகத்துறையிலும் தீவிர வளர்ச்சி அடைந்தவருமான ஆகாஷ் பாஸ்கரனின் சென்னையில் உள்ள வீட்டில், இரண்டாவது நாளாகவும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதயம் ரளி, பராசக், எஸ்.ஆர். 49 போன்ற பல பெரிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்த ஆகாஷ் பாஸ்கரன், கடந்த 6 மாதங்களில் திடீர் வளர்ச்சி பெற்றுள்ளார். இவர் தயாரித்த படங்கள் மட்டும் 500 கோடி ரூபாயை தாண்டியதாக கூறப்படுகிறது.
சோதனையின் பின்னணி: ஆகாஷ் பாஸ்கரன் Salem PRR ஸ்வர்ணமாளிகை, வேலவன் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான பாஸ்கரனின் மருமகனாகவும் இருக்கிறார். பாஸ்கரனின் இரண்டாவது மகளான தரணியை ஆகாஷ் கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிந்தைய மாதங்களில் ஆகாஷின் தொழில் வளர்ச்சி தீவிரமானது.
இந்த வளர்ச்சி, அவர் பணப்புழக்கம் மற்றும் சொத்துக்களில் ஏற்பட்ட திடீர் உயர்வு தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம், வருமான ஆதாரங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
செய்திக்கிடையில், ஆகாஷ் தனியார் பள்ளி ஒன்றையும் வாங்கியுள்ளதாகவும், அவரது குடும்பத்தின் வாகன வணிகம் கணிசமாக வளர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகாஷ் பாஸ்கரன் கடன் வாங்கியதா? அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத வழிகளில் பணம் வந்ததா என்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை தற்போது ஆய்வு செய்து வருகிறது. தற்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.















