சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு. இன்று படிக்கும்போது சிரிப்பாக இருக்கிறது. பொங்கலோ பொங்கல் எனப் பொங்கி இருக்கிறேன் 😂
----------
இன்று சம்பந்தமே இல்லாத விவாதம். யாரோ ஓர் எழுத்தாளர் "குமாஸ்தா எழுத்தாளர்" என்று ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியதற்குப் பொங்கிவிட்டேன். ஏன் எனக்கு அவ்வளவு உணர்ச்சி பொங்கல்?
இது உயர்ந்த இலக்கியம், இது தரமில்லாத இலக்கியம் என்று பிரிப்பது ஒரு தனி நபர் தனது ரசனைக்கேற்ப செய்யலாம். ஆனால், இப்படிப் பிரித்து, இதுதான் சிறந்தது என்று உலகிற்கே அறிவிக்கும் பொழுது அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இது இன்னொரு கேள்விக்குக் கொண்டுசெல்கிறது. விருதுகள் மற்றும் விமர்சனங்கள் படைப்புகளுக்கு எதற்கு? விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்குத் தேவையா? அவற்றின் பனி என்ன?
புதுமைப்பித்தன் தனது சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் எழுதியிருந்தார், "எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதையின் பக்கத்தில் அவர்களின் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்க வில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்." என்பது போல எழுதியிருந்தார்.
அவர் சொல்வது சரிதான். சில கோட்பாடுகளை வைத்துக்கொண்டு, அந்த கோட்பாடுகளுக்குள் எந்தளவு ஒரு படைப்பு அடங்குகிறது என்று அளக்கும் அளவில்தான் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு படைப்பாளிக்கு அப்படிப்பட்ட விமர்சனங்கள் தேவை இல்லை. அவற்றால் படைப்பாளிக்கு எந்த பயனுமில்லை. ஒரு படைப்பாளிக்குத் தேவையான விமர்சனம், அவனின் படைப்புகளில் ஊறி இருக்கும், அடிநாதமாக இருக்கும், அவனே கண்டிராத விஷயங்களை அவனுக்கு எடுத்துச்சொல்வது. அப்படிப்பட்ட விமர்சனம்தான் படைப்பாளியை சுய பரிசோதனை செய்ய நகர்த்தும். இதுவும் ஆரம்பநிலையில் மட்டுமே தேவைப்படும்.
ஒரு விருது கொடுப்பதன் மூலம் இப்படிப்பட்ட விமர்சனம் கிடைக்கிறதா என்றால் இல்லை. பெரும்பாலும் விருது கொடுக்கப்படும் போது, அதோடு சேர்த்து சில வரிகளில் எதற்காக இந்த குறிப்பிட்ட படைப்பிற்கு இந்த விருது வழங்கப் படுகிறது என்று சொல்ல வேண்டும். பல விருதுகள் இதைச் செய்கின்றன. அப்படிப் பார்க்கும் போது ஒவ்வொரு விருதுக்கும் ஓர் அரசியல் இருக்கிறது, ஒரு நோக்கம் இருக்கிறது. எந்த படைப்பாளிக்கு, எந்த நேரத்தில், எந்த ஆட்சி இருக்கும் போது எந்த விருது கிடைக்கும் என்பதிலும் ஓர் அரசியல் இருக்கிறது. ஆக ஒரு விருது உண்மையிலேயே பாராட்டா?
விருதும், விமர்சனமும் மக்களுக்கு ஒரு படைப்பை அடையாளப்படுத்திக் காட்டுகின்றன. "குற்றம் கடிதல்" என்ற படத்திற்குத் தேசிய விருது கிடைக்காவிட்டால் நான் அதைத் தேடிப் பார்த்திருக்க மாட்டேன். அந்த வகையில் ஒரு விருதோ விமர்சனமோ ஒரு படைப்பை மக்களிடையே பரிச்சய படுத்துகிறது. வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
அந்த நிலையில் மட்டுமே விருதையும், விமர்சனத்தையும் வைக்க வேண்டும். விருது கிடைத்ததால், இந்த படைப்பு மற்ற விருது கிடைக்காத படைப்புகளை விட மேன்மையானது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.
அடுத்து எது இலக்கியம்? ஒரு சில "தீவிர இலக்கியவாதிகள்" மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு கருத்து, "இது வெறும் எழுத்துதான். இது இலக்கியம் அல்ல." என்று. அதாவது வெகுஜன மக்களுக்காக எழுதினால், அதில் எப்பேர்ப்பட்ட கலையம்சம் இருந்தாலும், அது எழுத்து மட்டும்தான். இதையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. "இலக்கியம்" என்ற சொல் "இலக்கு + இயம்" என்ற இரு சொற்களால் ஆனது. இலக்குடன் உருவாகும் ஒரு சொல் இலக்கியம். அவ்வளவுதான். ஆக ஏதோவொரு இலக்குடன் நான் என்ன கிறுக்கினாலும் அது இலக்கியம்தான். இல்லை என்று எந்த கொம்பன் சொன்னாலும், அந்த கொம்பன் தமிழ் மொழியில் அவன் "இலக்கியம்" என்று கருதும் படைப்புகளுக்குத் தனியாக ஒரு சொல் அமைத்துக்கொள்ளட்டும்.
Singpowrimo ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கவிதை எழுத தூண்டும் இயக்கம். 30 நாட்களில் 30 கவிதைகள். ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பு வழங்கப்படும், அந்த தலைப்பில் கவிதை எழுதவேண்டும். முதல் முறையாக இந்த வருடம் தமிழில் நடந்தது, வந்த தலைப்புகளில் 7 நாட்கள் மட்டுமே நான் கவிதை எழுத முயற்சித்தபோது...
தலைப்பு: முதல் காதலை மீண்டும் பார்க்கும் தருணம்
உயிர் தெறிக்க மக்கள் ஓடிக்கொண்டிருக்கும்
புரியா மொழியில் பெயர்கொண்ட அங்காடி வாசலில்
பத்து டாலருக்கு மூன்றென குவிந்து கிடந்த
தற்காலிக புத்தக கடையில்
பார்த்தான்.
சிறு வயது வீட்டில்
பழைய துணிகள் அடைத்திருந்த அலமாரி அடுக்குக்கும்
பவுடர் சீப்பு கண்ணாடி சுமந்திருந்த அடுக்குக்கும் நடுவிலிருந்த
அவனது புத்தக அடுக்கு நினைவு வந்தது.
உயரப்படி மாற்றி மாற்றி அடுக்கப்பட்ட புத்தக வரிசை நடுவே
நெட்டையாகவும் இல்லாமல் தடிப்பாகவும் இல்லாமல்
இடதும் வலதும் சாய்ந்திருந்த புத்தகங்களை
காந்த சக்தி பிடித்து நிறுத்தியதைப் போல
நின்றிருந்த மஞ்சள் நிற புத்தகம்
இன்று
கடை குவியலில் தென்பட்டது.
ஆளில்லா ஒரு டங்க்ஸ்டன் விளக்கொளி இரவில்
புத்தக அடுக்கு முன்னே மௌனமாய் அமர்ந்து
சிமிட்டாத அவன் கண்கள் மஞ்சள் புத்தகத்தையே பார்த்தபடி
உதிர்த்த கண்ணீர் இன்றும் நினைவிருந்தது.
உயர்ந்த மேடைகளிலிருந்து உரத்த குரல்களின்
மிரட்டும் வார்த்தைகள் காதுகளில் விழும்போதெல்லாம்
ஏதோவொன்று அவனுக்குள் இறுகும்.
அது மஞ்சள் புத்தகத்தை இறுக அணைத்துக்கொள்ளும்
மனதின் கரங்கள்
இப்போது புரிகிறது.
மெல்ல நெருங்கி புத்தகத்தை
அவன் கிள்ளி எடுக்கும் இந்தத் தருணம்
மக்கள் உயிர் தெறிக்க ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
அவனும் அதுவும் மட்டும்
மறைகின்றன.
தலைப்பு: ரயில் பயணம்
பிடிமானமற்று ரயிலின் ஓட்டத்துடன் கரையும் சிறுவனை
இழுத்து பக்கத்தில் அமர்த்தும் தந்தையின்
மடிப்பு கலையாத சட்டையில்
மெல்லிய சுருக்கம் தோன்றுகிறது.
சீட்டுக்குள் சுருங்கியதும்
தரையை எட்டாத கால்களை ஆட்டும் சிறுவனிடம்
"சீட் கிடைச்சா உக்காரனும்" என்கிறார்.
தலைப்பு: அப்பாவுக்கு ஒரு கடிதம்
மேஜை மீது வரம்பற்று படுத்திருக்கும்
புத்தகங்களின் இடுக்கில்,
எழுதி மடித்த கடிதத்தை
காலத்தின் விரலற்ற கரங்கள்
அவசரமாக கிழிக்க முயன்றதைப் போல
கிடக்கிறது
அப்பா கடைசியாக வாங்கித்தந்த வாலட்.
தலைப்பு: நிலா
ஒரு வருட உழைப்பின் களைப்பில்
சூடான தே ஓ லீமாவுடன் அமர்ந்தேன்.
நிசப்த போர்வையாக என் முன் விரிந்திருந்த சூரிய மண்டலம்.
திட்டமிட்ட வேகத்தில் நிலவை முட்ட விரையும் விண்கல்.
இன்னும் பத்து வினாடிகளில் நிலவு…
என் தேநீரில் மிதக்கும் கலமான்சியை சுண்டினேன்.
சூனியத்தில் கலக்கும் ஆர்வத்துடன் எங்கோ உருண்டோடியது.
மனிதர்களின் குற்றமல்ல.
நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் பூமிக்கு காட்டியது என் பிழை.
போதும்.
இனி நிலவில்லாமல் இவர்கள் காதலிக்கட்டும்.
தலைப்பு: கதவுகள்
விசைப்பலகை விளக்குகளின் கோடிட்ட பிரகாசத்தில்
மின்சாரம் பாய்ந்த நிமிர்வுடன் சிலிர்த்தபடி தலையாட்டிச்
சிரிக்கின்றன சிறு பொத்தான்கள்.
ஸ்பரிசத்தை அள்ளிச் சேமித்துக்கொள்ள
கன்னத்தைக் காட்டி காத்திருக்கிறது தொடுகளம்.
தொடக்க மணியோசைக்குபின் சப்தமற்ற வேகத்துடன்
கண்கள் அறியா ஏரண கதவுகள் வழி தாவி
சிலிக்கான் பாகங்களை தகிப்புற தழுவி எழுப்புகிறது
நிரல்தொடர் பிரவாகம்.
இன்னும் என்ன தேடல்
இதோ வரம்பற்ற விசும்புகளின் வாயில் என
என்னிடம் அறிவிக்கிறது
கொத்திய வெள்ளை ஆப்பிளுடன் நிற்கும்
என் மடிக்கணினி திரை.
பேருந்தில் ஜிகர்தண்டாவின்
பக்கத்து இருக்கையில்
மைலோ டைனோசர்.
இரண்டுக்கும் இடையிலான
மௌன சுவரின்
கற்களாக வந்தமர்கின்றன,
இணையசுட்டியை அழுத்தி
தளம்பெயர்வதைப்போல் பாயும்
பயண அட்டைகள் தட்டப்படும் சத்தங்கள்.
An edited version of this article can be read here.
Name : Mysskin
Skills : Director, Screenwriter, Producer, Singer, Actor
Language : Tamil
Active Since : 2006
Favourite Genre : Crime Thriller / Drama
Biggest hits : Onaayum Aattukkuttiyum (2013), Yuddham Sei (2011), Anjathe (2008)
Shanmugha Raja was so impressed by the character of Prince Myshkin in Fyodor Dostoevsky’s The Idiot that when he began his film career, he decided to rechristen himself as Mysskin. And just as Amarendra Bahubali died while roaring “Jai Mahishmati!”, Mysskin is the kind of director who wishes to draw his last breath between shouts of “Action!” and “Cut!”. His films are a reflection of his real-life character. They’re moody, melodramatic, poetic, rebellious and stylised at the same time.
His Best Work
Onaayum Aattukkuttiyum (The Wolf and The Lamb, 2013): Chandru, a medical student finds a man lying bleeding on the road from a bullet wound. When hospitals and the police refuse to take swift action, he carries the wounded man home and attempts a splenectomy to save his life. The next day the man goes missing and the police arrive to arrest Chandru and his family, revealing that the man he saved was a murderer. Who exactly is the man Chandru saved? What happens to Chandru’s life after this incident? These form the rest of the film’s plot. Together with Anjathe (Have no Fear, 2008) and Yuddham Sei (Wage a War, 2011), this film makes up Mysskin’s crime trilogy.
Pisasu (Ghost, 2014): This isn’t your typical horror film in which the ghost wants to avenge its death so that it may attain liberation. The house of Siddharth, an upcoming violinist, is haunted by the ghost of a girl he tried to save from a road accident. Pisasu is Siddharth’s journey in understanding the ghost’s true intentions.
Trivia: This film was produced by Bala at a time when horror flicks were all the rage in Tamil cinema. Remember ‘cunning commercialism’ from Bala’s filmmaking tropes? :)
Nandalala (Lullaby, 2010): This film is in sharp contrast to the rest of Mysskin’s filmography in terms of content and genre. Inspired from Takeshi Kitano’s Kikujiro, it’s the story of two characters in search of their mothers - one is a lonely young boy and the other is a mentally challenged person on the run. Their unlikely friendship and adventures make this a heartwarming film, as illustrated by this scene.
https://www.youtube.com/watch?v=3HvujIsqh9Y
5 Filmmaking Tropes of Mysskin
Compassion
Whether the genre is drama, thriller or horror, Mysskin’s recurring theme in each film has been compassion and forgiveness. His films inevitably have a character who begs for forgiveness or a character who wholeheartedly forgives. They’re compassionate and melodramatic crime dramas! His films are what you get if Anurag Kashyap’s body gets possessed by Rajkumar Hirani’s soul.
The world he portrays is cruel with untoward accidents lurking around every corner and filled with heartless people who look away when someone bleeds to death. In his world you’re better off being blind, but there’s inevitably that one soft-hearted person who’ll go to any extent to save a life. Pisasu depicts the pinnacle of compassion and makes you reflect silently on the violence that’s usually unleashed on screen in the name of revenge. In fact, this song gives voice to the underlying thread that ties all his films together. It speaks of darkness being dispelled by the flame of heart and God falling at the feet of man.
https://www.youtube.com/watch?v=xtFE1eLcNUU
Stylised Staging
Mysskin abhors the close-up and finds it boring. His films lay bare their interiors for your inspection with innumerable static, wide-angle shots. You’ll find the characters going out of focus during critical moments. Mysskin likes to convey emotions through the entire body and movement, both of the actors and the camera. In his recent interview with Baradwaj Rangan, Mani Ratnam revealed his thought process behind staging scenes in a way that adds more depth. Likewise you can find Mysskin constantly experimenting with staging. Some work and some don’t but you can always see he’s trying. Here’s a scene from Anjathe of a police officer’s attempts to save a dying man. Emotion, emotion everywhere but not a single close-up to feel!
https://www.youtube.com/watch?v=w44WU2a8c9A
Several cardboard boxes containing severed hands had to be revealed in public places at different points in the narration of Yuddham Sei. This is achieved by a repetitive visual motif, involving a long shot with the camera finally tracking sideways to reveal each box. And in Onaayum Aattukkuttiyum, when he depicts an investigation, visuals of officers asking questions is intercut with visuals of a wooden table being dragged across the floor. The sound of wood grating against concrete intercuts the barrage of questions.
https://www.youtube.com/watch?v=cznhHYAQyUs
His stunts are extremely stylised and get your adrenaline pumping. Classic examples are the fight on an overbridge with a pocket knife in Yuddham Sei and the subway fight in Pisasu. There are no grand sets or camera gimmicks but instead you have simple blocking, movement and editing. This perhaps stems from the director’s love of kung fu, which by its very nature is a simplistic martial art. Moreover, the stunts are never present just for the sake of it. The overbridge fight comes at a point in Yuddham Sei when the protagonist gets a firm hold on the case he’s investigating, just as firmly as he grips the pocket knife in his hand.
Dark Humour
In the opening portions of Onaayum Aattukkuttiyum, as a bleeding man lies in the middle of the road, passers by click photos to be posted on Facebook. When he’s rushed to a hospital, there’s a ward boy who’s enjoying a comedy scene on television with a smile permanently plastered on his face. There’s wry humour in the last words of each person who is shot dead. Some of them shout out names of Gods, some the names of women while some merely cry out, “Why?” And in Yuddham Sei, a man’s severed head is found amidst a bunch of watermelons!
Fragile Protagonists
Unlike Bala’s protagonists who’re larger than life, Mysskin’s protagonists are flawed and fragile. We’ve seen cool police officers and gangsters in mainstream cinema, who strut on screen as if they were born to be a cop or a criminal. Mysskin strips his characters of any cool factor. In Anjathe, you can see the protagonist’s struggle in coming to terms with the harsh realities of being a police officer and in Onaayum Aattukkuttiyum, the medical student can hardly bear the brutalities that he’s forced to witness. When such protagonists overcome their weaknesses to stand up and fight, then we jump into their shoes and the film resonates with us.
Foreground Music
Mani Ratnam uses songs as a bridge to travel from one point in his story to another or to heighten and elaborate an emotion. Unlike Mani, Mysskin considers every song a roadblock to his narration. As a result, songs in Mysskin films are either non-existent or thrown in deliberately, thereby shifting the focus to background score.
Typically background score is used to underline emotions or in the rare case to act as a counterpoint to visuals. Sidney Lumet stated in his book Making Movies, “I want the score to say something that nothing else in the picture is saying.” Mysskin attempts to do just that and here’s a great example of this in an early scene from Anjathey. The film’s core is the friendship between two men which goes awry. As they reach a crossroads during their banter, the background score is an ominous wail mourning the events that are to unfold.
In a specific scene from Onaayum Aattukkuttiyum, when a character hacks at the legs of some baddies as revenge, the background score doesn’t celebrate his heroic act. Instead it mourns and sounds almost like “Ah! Being born as humans, the kind of things we’re made to do…” In Pisasu, after the protagonist witnesses death firsthand, the scene cuts to a music studio, in which he’s one of the violinists. He plays a tune that’s out of sync with the current composition but in sync with his internal emotions.
In Onaayum Aattukkuttiyum, which is in essence a hunting expedition, there’s the persistent hum and roar of bike engines throughout the film. This sound doubles up as a mechanical counterpoint to the human heartbeat as well as the dull roar of a predator. You hear it when a wounded man is drawing his last breath and hear it again when a constable remains frozen awaiting his death. This use of sound coupled with a background score helps Mysskin communicate unspoken words and emotions. In fact, in Onaayum Aattukkuttiyum he credited the composer Ilaiyaraja for “foreground score”.
In conclusion
In Yuddham Sei, the protagonist spends every night under the streetlamp where his missing sister was last seen. Just like the person from the zen story who searches for a lost key, the revelation hits the protagonist much later that he’s been looking in the wrong place all along. Mysskin’s films are peppered with many such zen moments. He’s a big fan of the Japanese haiku and his films are a vast and complex web made by stringing a lot of cinematic haikus together. Each scene is composed like a riddle that offers up something new on multiple viewings. The sequences in Pisasu that build up to reveal the true identity of the culprit are best enjoyed on a second viewing.
And just like a haiku you never know what’s coming. One moment you’d be savouring an existential quandary and the next line would hit you with melodrama and the very next would drop you in the middle of action. It’s best to treat the scenes of Mysskin films as you’d treat a haiku. Depending on your temperament, you could cast them aside as meaningless aesthetic constructs or plumb into their silent depths and construct your own meaning.
(With inputs from N Balasubramanian and Srinath Nalluri)
An edited version of this article has been published on Film Companion.
Name : J Mahendran
Original name : Alexander
Skills : Director, Screenwriter, Film critic
Language : Tamil
Active Since : 1966
Favourite Genre : Drama
Biggest hits : Mullum Malarum (1978), Uthiripookkal (1979), Nenjathai Killathe (1980)
Like Francois Truffaut, Mahendran started out as a film critic. His reviews of Tamil films for magazines like Thuglak were scathing. He went on to write screenplays and dialogues for several hit films, starring Sivaji Ganesan and MG Ramachandran, before making his directorial debut with Mullum Malarum (A Thorn and a Flower, 1978). Mahendran took ample inspiration from literature for his screenplays. 10 out of the 12 films he directed have been adapted from literary works by Tamil writers. Being an avid fan of Satyajit Ray, his films portray villages, cities and characters as they are without romanticizing or passing judgements.
His Best Work
Uthiripookkal (Unstrung Flowers), 1979
Adapted from Sittrannai (Stepmother), written by Pudhumaipithan, Uthiripookkal is the story of Sundaravadivelu, a sadistic manager of a village school and his desire to marry his wife’s sister. The film lures you gently into the rhythms of village life before it unleashes drama, through the actions of Sundaravadivelu to attain his goal. It has one of the most understated yet haunting antagonists of Tamil cinema.
Poottadha Poottukkal (Locks that don’t lock), 1980
Adapted from the short story Uravugal (Relations) by writer Ponneelan, this film focuses on the fissures in a married couple’s relationship when they can’t have a child. The wife falls for a young man, who gives her attention and the drama that unfolds forms the rest of the story. It’s a subtle meditation on how the human mind works in relationships and how the invisible forces of societal expectations weigh down heavily on married men and women.
Mullum Malarum (A Thorn and a Flower), 1978
Mahendran began reading a novel by Umachandran, set it aside halfway through and wrote this film’s screenplay. It’s about a brother and a sister in a village, who’re orphans. The brother, Kaali, works as a winch operator at a power plant. His relationship with his supervisor is strained from the beginning and their skirmishes lead to him losing his left hand. This was one of the first films in which Rajinikanth, who had done negative roles until then, played the protagonist. Mullum Malarum, Johnny (1980) and Kai Kodukkum Kai (1984) are 3 Mahendran films that provide a glimpse of a Rajinikanth devoid of the larger-than-life image that he’s known for today.
Trivia: This film was later remade in Hindi as Pyaari Behna (1985) with Mithun Chakraborty playing Rajini’s role.
5 Filmmaking Tropes of Mahendran
Sharp storytelling
During his days as a critic, Mahendran slammed Tamil movies for being ‘talkies’ rather than cinema. He abhorred melodrama and the monologue. So the first thing that strikes you about his films is his precision with words and images. The words and their understated tone maintain the drama at a realistic pitch. A character might be bursting with anger but in a Mahendran film, all you’ll hear is a single line spoken calmly.
Take for instance, the scene in Uthiripookkal that introduces a couple. The husband is seated at home eating his lunch, while the wife stands nearby. He bites into a pebble while chewing and his face contorts. He glowers at his silent wife and says, “Can’t you be careful while cooking?” The entire bitterness of their relationship is packed into that single line and his contorted face.
Mysskin revealed in an interview with Baradwaj Rangan that he considers the opening shot of his film to be critical. The opening shot dictates the shots that follow. Likewise, Mahendran establishes his film’s theme visually within the first five minutes. The opening title sequences of Nenjathai Killathey (Don’t Pinch My Heart, 1980), show Suhasini jogging through city streets shrouded in mist. The film is about her running to and fro in relationships.
The opening shot of Metti (Toe Ring, 1982), shows two daughters waking up, admiring their mother’s toe ring as she walks towards them. The film is about their yearning to wear the toe ring and how it shackles their lives. In Mullum Malarum, Kaali’s resentment against authority is established within a single minute in this scene. He feels the same resentment later against his superior officer.
Nature & rhythms of life
When asked what kind of literature he liked, this was Mahendran’s reply. “It’s filled with limitless beauty, countless wonders and mysteries that man is yet to decode. It nourishes mankind and all living organisms. Nature is the best literature.” You’ll find his love of nature woven into the fabric of every film he made. In Poottadha Poottukkal, cats purr on a sleepless night as a couple mutely stare at each other. A barber in Johnny lives and sleeps amidst animals and plants. A popular song from Mullum Malarum has a man singing of the breeze that played on a pandan flower and washed over him, its scent creating the illusion of a woman.
Mahendran has a keen eye for observing life and capturing its details with precision. The lines his characters speak sound real. A village woman bargaining with a cloth seller in Uthiripookkal, remarks, “Give us a good price. Don’t try to cover your daughter’s wedding costs by selling us this saree!” A fight in Mullum Malarum that churns up dust, with mediators and silent onlookers takes place without the accompaniment of the typical “dishoom dishoom” of the 80s. And even if it’s an urban setting, he captures its spirit well in films like Nenjathai Killathey.
Ripple architecture
The supporting characters and songs in every Mahendran film echo its main theme. In Uthiripookkal, that explores a man’s sadism and lust, there’s a lunatic, who pesters people to read out a letter from his runaway wife. And an old woman sings a song, during an engagement, with the fond memory of her dead husband. In Poottadha Poottukkal, that plunges into the darker crevices of marriages, almost every other male character ogles at women, including an adopted child who’s a peeping tom. In Nenjathai Killathey, a story about finding love and companionship, he has a comic character in his 40s who’s still single.
Metti, a commentary on the institution of marriage, has a playful song, Kalyanam ennai mudikka (In order to marry me). A woman lays down her conditions for marriage like wanting the groom to play the nadaswaram and the marriage ceremony to take place on a moving train with foreigners chanting hymns! Johnny’s protagonist is a thief for whom stealing is an emotional burden and the release he finds in a singer’s voice is succinctly expressed in this song.
These characters and songs aren’t sprinkled to make the film more interesting. They’re deliberate choices that grow organically out of the film’s theme. He lays out these characters and songs in concentric circles echoing the film’s core, like ripples in water.
Submerged Symbols
On the surface, having Kaali as a winch operator in Mullum Malarum adds a touch of realism. But, looking closely at how Kaali’s relationship with his superior slides steadily downhill, you realise that perhaps the winch is a symbol. There’s a scene that shows Kaali playing uriyadi, the traditional game of hitting a moving target with a stick while people hurl water at him. In a way, that’s a visual summary of Kaali’s life. He grew up as an orphan fighting against the society and taking care of his sister all by himself. He bears a boiling resentment against people in power, since their position is always out of his reach, just like the moving target.
In the splendid climax of Uthiripookkal, it’s only the men of the village who gather and force the antagonist to drown himself in the river. There’s no woman to be seen. The villain is a demon who represents the filth in the hearts of all men and the climax is a call to destroy that demon, so that we can move on as a society and live a better life. Seen this way, Uthiripookkal is a much larger film than simply the tale of a solitary sadist and how he meets his end.
Likewise the toe ring in Metti and a poster in Nenjathai Killathey depicting children dressed up as a couple are symbols that make a bigger point. The good thing about Mahendran’s films is that you can enjoy them without really bothering about these symbols or what they signify. But, when you watch his films closely and look beneath the surface, you’re sure to relish them even more and inch closer to their underlying themes.
Silence
Mahendran loves to begin a scene in the middle of a conversation and linger on the characters during uncomfortable pauses. A classic example is a night panchayat scene from Uthiripookkal. The entire village is gathered to debate the villain’s atrocities. His wife weeps silently and we get closeups of a lot of faces. The only sound you hear is the unconsoled wail of a child in the background.
During an emotional moment in Metti, when a character’s mother dies, she’s seen sitting on the floor and sobbing in an empty space surrounded by flowers. That’s the emptiness left behind after her mother’s body has been carried away. Mani Ratnam, who later became known for such powerfully visual moments, can be seen as carrying forth the torch of silence from Mahendran’s hands.
Mahendran once remarked, “Ilaiyaraja wrote the dialogues for my silent scenes. He should be credited as my co-writer!” It’s exhilarating to study the musical themes that Ilaiyaraja develops for various characters and subplots in each film. In Uthiripookkal, for instance, there’s a theme for the antagonist’s desire for his sister-in-law, a theme for the innocence of his children and a theme for the unspoken desires of his wife. And there’s silence in his songs too. ‘Senorita I love you’ shows a couple play-acting as husband and wife. Later in the film, the girl ditches the guy for someone else. So there was never any love between them. Everything was make-believe, just like their silent mimes.
In conclusion
The great thing about watching Mahendran films is that a specific character, a specific line or a specific visual is bound to stick in your mind and not leave you. You can revisit his films at a later stage in your life and you’ll get new insights. It happens because his films don’t have a planned architecture to achieve an intended effect. They’re complex, organic growths that mirror real life and so each time you enter them, you’ll spot something new that’s sprouted under your feet.
“We must learn cinema from the people around us. It’s important to express naturalism with an aesthetic sense. One doesn’t need to rack one’s brains for aesthetics. If you look through the eyes of people around you, you can acquire an aesthetic sense naturally.” This is Mahendran’s cinema in a nutshell - real characters in their natural habitats, their natural behaviours, their emotions, their interactions, captured through an aesthetic lens that doesn’t judge.
ஏப்ரல் மாத தி செராங்கூன் டைம்ஸ் இதழில் நண்பர் சிவானந்தம் எழுதிய "நுனியில் முகிழ்க்கும் நறுமணம்" படித்தேன். நல்ல கட்டுரை. புத்தகம் படிப்பதை தியானத்துடன் அவர் ஒப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (அப்படி பல தடவை தியானங்களில் ஈடுபட்டு என்னையே மறந்ததினால்.) அதே சமயம் என்னை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயமும் ஞாபகம் வந்தது.
வாசிப்பின் நன்மைகள் என்று அவர் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் பிற ஊடகங்களிலும் கிடைக்கும் என்பதே என் கருத்து. சில உதாரணங்களை பார்ப்போம்.
வீடியோ கேம்ஸ்
இவற்றின் மீது பொதுவாக வைக்கப்படும் புகார், “ஏதோ பொழுது போகாம டி.வி முன்னாடி உக்காந்திட்டு இருக்காங்க இந்த காலத்து பசங்க. கண்ணு கெட்டு போகாது? ஓடி ஆடி விளையாடினாதானே உடம்பு ஆரோக்கியமா இருக்கும்? ச்சே! அந்த காலத்துல...”
வீடியோ கேம்ஸ் மட்டுமில்லை, எதற்குமே அடிமை ஆவது தவறு தான். ஆனால் அவற்றின் முக்கியமான அம்சத்தைக் கவனிக்க தவறுகிறோம். அவற்றிலும் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. புத்தகத்தில் பக்கங்களை திருப்புவது மட்டும் தான் நமது செயல். ஆனால் வீடியோ கேமின் உலகில் நாம் விரும்பிய திசைகளில் செல்லலாம், நினைத்த இடங்களை ஆராயலாம். ஒவ்வொரு முறை விளையாடும் போதும் நாமே கதையை எழுதுகிறோம்.
உதாரணத்திற்கு ஹாரி பாட்டர் கதைகளை வைத்து பல வீடியோ கேம்ஸ் தயாரிக்க பட்டுள்ளன. புத்தகங்களில் இடம்பெற்ற கதைக்களம் மட்டும் தான் இருக்கும். அக்களத்தில் நாம் எந்தக் கதாப்பாத்திரத்தின் கோணத்திலிருந்தும் விளையாடலாம். நமக்கு பிடித்த திசையில் கதையை நகர்த்தி செல்லலாம். Multi-player modeல் விளையாடும் பொழுது, ஒரே கதையை பற்பல நபர்கள் உருவாக்கிக்கொண்டே அனுபவிக்கிறார்கள். பத்து பேர் சேர்ந்தமர்ந்து ஒரே புத்தகத்தை வாசிப்பது போல.
ஸ்டேண்டப் காமெடி
நமது தொலைக்காட்சிகள் இதன் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கின்றன. மிமிக்ரி செய்து மக்களுக்குச் சிரிப்பு மூட்டுவது மட்டும் “ஸ்டேண்டப் காமெடி” அல்ல. ஸ்டேண்டப் காமெடியும் ஒரு வித கதை சொல்லல் தான். ரஸ்ஸல் பீட்டர்ஸ், கென்னி செபாஸ்டியன் போன்ற ஸ்டேண்டப் காமெடி கலைஞர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்கிறார்கள். பாட்டி தாத்தாவிடம் கதைகள் கேட்டறிவது போல, மேடையில் மைக்குடன் நிற்கும் ஒரு மனிதனின் கதையை தெரிந்து கொள்வது தான் உண்மையான ஸ்டேண்டப் காமெடி.
ரியாக்ஷன் வீடியோ
2008ம் ஆண்டு இரானிய திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியாராஸ்தமி “ஷிரின்” (Shirin) என்றொரு படம் வெளியிடுகிறார். முழு படமும் ஒரு திரையரங்கிற்குள் நடக்கிறது. பின்னணியில் படம் ஓடிக்கொண்டிருக்க, அங்கே அமர்ந்து படம் பார்ப்பவர்களின் முகங்களை மட்டும் காட்டுகிறார். காட்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்களின் முக பாவங்கள் ஒரு கதை சொல்கின்றன என்பதுதான் இப்படத்தின் வித்து. நீங்கள் நிம்மதியாக அமர்ந்து உங்களுக்கு பிடித்தப் புத்தகத்தை படிப்பது போலக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் படிப்பதை வீடியோ எடுத்தால், உங்களின் முக பாவங்கள் தனிவொரு கதை சொல்லாதா? அது தான் தற்போது ரியாக்ஷன் வீடியோக்களாக யூட்யூபில் பிரபலமாக உள்ளது. ஆனால் அவற்றைப் பெரிதாக நாம் மதிப்பதில்லை. “இதுல என்ன இருக்கு? சும்மா உக்காந்து டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு. சங்க இலக்கியத்துல...”
மீம்
இதுவும் வெறும் வெட்டிப்பேச்சு கிண்டல் கேலியின் வடிவம் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது? அதை ஆராய்ந்தாலே புரிந்துவிடும். டானியல் சி. டென்னெட் என்ற விஞ்ஞானி நிறுவிய வார்த்தை தான் “மீம்”. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு உடல் அம்சங்களைக் கடத்தி செல்லும் தூதர்கள் “ஜீன்ஸ்” அல்லது மரபணுக்கள். அவற்றைப் போல ஒரு மனித மூளையிலிருந்து இன்னொரு மனித மூளைக்குத் தகவலை எடுத்துச்செல்லும் கருவி தான் “மீம்”. மீம் என்பது சமூக வலைதளத்தில் பகிரப்படும் படங்கள் மட்டுமல்ல. அவை மீம்களின் ஒரு வடிவமே.
அவையும் கதைகளே. வடிவேலு, கவுண்டமணியின் பல புகைப்படங்களை எடுத்து, வார்த்தைகளைச் சேர்த்து, ஒரு கதையை சொல்கின்றன. அவை உங்களை சிரிக்க வைக்கின்றனவா சிந்திக்கவைக்கின்றனவா என்பது அந்தந்த மீமை உருவாக்குபவரைப் பொறுத்தது. அது வடிவத்தின் பிழை ஆகாது. உதாரணத்திற்கு, இரண்டாம் உலக போர் பல நாட்டு தலைவர்கள் விளையாடிய வீடியோ கேம் விளையாட்டாக இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்கிற கதையை GIF வடிவத்தில் பாருங்கள்.
இன்றைய பிரகலாதன் சொல்கிறான், “கதை தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும், மீமிலும் இருக்கும். இன்ஸ்ட்டாகிராமிலும் இருக்கும்.” (நான் காலையில் பருகிய ஒரு கப் காபியின் புகைப்படத்தை பகிர்ந்தால், அதன் மூலம் ஒரு கதையைத்தானே பகிர்கிறேன்?)
இப்படிப் பற்பல வடிவங்களில் கதைகள் தற்போதைய தலைமுறையினருக்கு கிடைக்கும் போது, அவர்களைப் புத்தகம் படித்தல் என்ற சிறிய அறைக்குள் அடைப்பது சரியா? புத்தகங்கள் வாசிப்பது வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் அது மட்டுமே வாசிப்பு என்று நிறுத்திக்கொள்ளும் குறுகிய மனப்பான்மையைக் கேள்வி கேட்கிறேன். இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகள். அவர்கள் புத்தகங்களும் படிக்கிறார்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ்ஸும் பார்க்கிறார்கள். கே-பாப் இசையும் கேட்கிறார்கள். போக்கிமோன் கோவும் விளையாடுகிறார்கள். “அந்த காலத்துல…” என்று நாம் ஆரம்பிக்கும் கதைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்.
வடிவங்களைப் பற்றிய நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பதுதான் பிரச்சனை. “ஹைக்கூ” என்றொரு வடிவம் பல வருடங்களுக்கு முன் தமிழுக்கு வந்தது. பல தமிழ் கவிஞர்கள் அவ்வடிவில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜாப்பனீஸ் ஹைக்கூவின் முக்கியமானதொரு கோட்பாடு, பருவகாலத்தை குறிக்கும் ஒரு சொல்லாவது இருக்க வேண்டும். அதை எத்தனைப் பேர் தமிழில் பின்பற்றுகிறோம்? ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு வடிவம் செல்லும்போது மாற்றங்கள் நடப்பது இயல்பே.
“ஹைக்கூ” என்ற வடிவமே மாற்றத்தால் பிறந்ததுதான். ஜப்பானில் “ரெங்கா” என்றொரு கவிதை வடிவம் இருந்தது. பல கவிஞர்கள் ஒன்று சேர்ந்து பல சரணங்களை கொண்டு இயற்றும் கவிதை ரெங்கா. பிற்காலத்தில் முதல் சரணத்தை மட்டும் தனியாக எடுத்து வெளியிட்டு, அது “ஹைக்கூ” ஆனது. கலையில் வடிவ மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஜெயமோகன் எழுதிய “விசும்பு” தொகுப்பில் "தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை" என்றொரு அறிவியல் புனைவை படித்தேன். இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியையும், அடுத்த 1000 வருடங்களில் அதன் வடிவம் எப்படியெல்லாம் மாறலாம் என்றும் எழுதியிருக்கிறார். மின்கதை, நுண்கதை, மென்கதை என்ற வடிவங்கள் தோன்றலாம் எனக் கணிக்கிறார்.
இப்படி வடிவ மாற்றங்கள் நிகழும்போது, "வாசிப்பு" என்ற சொல் இன்னும் விரிவாகி பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். வெறும் புத்தகங்கள், கட்டுரை, சிறுகதை, கவிதை படிப்பது மட்டும் வாசிப்பு என்றில்லாமல், திரைப்படங்கள் பார்ப்பது, இசை கேட்பது, யூட்யூப் வீடியோ பார்ப்பது, அதற்கு ரியாக்ஷன் வீடியோ போடுவது, மீம்ஸ் பார்ப்பது, ஓர் இடத்திற்குச் சுற்றுலா செல்வது, இவை அனைத்தும் வாசிப்பே. வேறெதுவும் செய்யாமல் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து கடந்துசெல்கிற மக்களை வேடிக்கை பார்ப்பது, அல்லது மல்லாக்கப் படுத்து வானத்தை பார்ப்பதுகூட வாசிப்பு தான்.
வாசிப்பு என்ற சொல் விரிவடையும் போது, கற்பனையும் விரிவடையும். படைப்புகளின் வடிவங்களும் விரிவடையும். வாசிப்பும் வடிவமும் ஒரே வடையின் இரு பாகங்களை போல. “இது தான் வாசிப்பு” என்று நாம் திட்டவட்டமாக இருந்தால், “இது தான் கதை” என்ற கட்டமைப்பும் மாறாமல் தேக்கம் அடையும். உதாரணத்திற்கு, செராங்கூன் டைம்ஸ் இதழுடன் ஒரு இசை தகடு வந்தால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு படைப்பை படிக்கும்போதும் அதற்கேற்ற இசை காதில் கேட்டால்? இது ஓர் உதாரணம் மட்டுமே ஆனால் இப்படி நாம் யோசிக்கக்கூடத் தயங்குவதற்கு காரணம் “வாசிப்பு” என்ற சொல் விரிவடையாததுதான்.
வாசிப்பு விரிவடையும்போது, படைப்பாளிக்குத் தூண்டுதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் உண்டாகிறது. சத்யஜித் ரே “அரண்யர் தின் ராத்திரி” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்கு மொசார்ட்டின் இசை தான் உந்துதல். மொசார்ட்டின் இசையில் பற்பல இசைக்கருவிகள் கோர்வையாக கேட்கும், அதே சமயம் ஒவ்வொரு கருவியும் தனித்தன்மையுடன் ஒலிக்கும். அவரின் இசைக்கருவிகள் போல பற்பல கதாப்பாத்திரங்களை வைத்து ஒரு காட்சி உண்டாக்கினால் என்ன என்பது ரேயின் சிந்தனை. அதே போல பாடல் ஒன்றைக் கேட்டு, அதன் அமைப்பைப் பிரதிபலிப்பது போல ஒரு கதையோ கவிதையோ ஏன் எழுதக்கூடாது?
“கலிலியோ மண்டியிடவில்லை” புத்தகத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் கற்பனையான ஜீவராசிகளின் வழியே இலக்கியம், திரைப்படம், கவிதை, இசை ஆகிய பல கலைகளைப் பற்றி எழுதுகிறார். ஒசில் என்ற பூனை அவருக்கு புத்தகங்களை பற்றிக் கூறும். ஏகா எனும் தவளை கவிதைகளைப் பற்றியும், ஐசி எனும் வண்டு திரைப்படங்கள் பற்றியும், புலனி என்ற பறவை இசை பற்றியும் சிலாகித்துப் பேசும். இவை வெறும் நான்கு ஜீவராசிகள். இப்படி கலைவடிவங்களின் அழகை எடுத்துச்சொல்லும் பல ஜீவராசிகள் நமது வாசற்கதவுகளுக்கு வெளியே காத்துக்கிடக்கின்றன. கதவைத் திறந்து அவற்றையும் வாசிப்பறைக்குள் அழைப்போமா?
இயற்கை, விஞ்ஞானம், கலை - இப்படி தனித்தனி சொற்கள் இருப்பதாலோ என்னவோ, நாம் இவற்றை தனித்தனி துறைகளாகப் பார்க்கிறோம். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தவை. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு, நேற்று சிங்கை ArtScience Museumல் நடந்த Human+ என்கிற நிகழ்வில் பேசிய நீல் ஹார்பிஸன்.
முதலில் இவரின் TED Talk ஒன்றைப் பாருங்கள். 9 நிமிடங்கள் தான். கண்டிப்பாக நேரம் வீணாகாது.
பிறவியிலிருந்தே இவரின் கண்கள் நிறங்களை அடையாளம் காண இயலாதவை. கருப்பு வெள்ளை பார்வை தான் இவருக்குண்டு. அறுவைசிகிச்சை மூலம் தனது தலையில் ஆண்டெனா ஒன்றைப் பொருத்தி, அதை வைத்து நிறங்களை ஒலியாகக் கேட்கிறார். நமக்கு எது பச்சையோ, அவருக்கு அது குறிப்பிட்ட அலைவரிசையில் கேட்கும் சப்தம். சிகப்பு வண்ணத்துக்கு வேறொரு சப்தம். இப்படி எல்லா வண்ணங்களும் அவருக்கு வெவ்வேறு சப்தங்களாக கேட்கும்.
இவருக்கும் சங்க கவிஞர்களுக்கும் என்ன சம்பந்தம்? இயற்கையைக் கூர்ந்து கவனித்து, அவதானித்து, புரிதல்களை எழுப்பி, அவற்றைக் கலை வடிவங்களாகப் படைத்தனர் சங்க கவிஞர்கள். நீல் ஹார்பிஸன் தலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஆண்டெனாவிற்கு இயற்கையிரிலிருந்துதான் உந்துதல் வந்தது. முதலில் நெற்றியில் வட்ட பொட்டாக கருவியைப் பொறுத்த நினைத்தவர், தன்னைச் சுற்றி உள்ள எல்லாத் திசைகளிலிருந்தும் வண்ணங்களைக் காண, பூச்சிகளின் ஆண்டெனாவிலிருந்து உத்வேகம் பெற்று, தனது ஆண்டெனாவை வடிவமைத்தார். ஆரம்பத்தில் வண்ணங்களை ஒலியாகக் கேட்க நினைத்தவர், மனிதர்களின் குரல்களில் வண்ணங்களைக் காண ஆரம்பித்தார். உடனே அவர் சந்திக்கும் மக்களின் குரல்களை வண்ண படங்களாக வரைந்து, "Voice Portrait" உருவாக்கினார்.
வானவில்லின் வண்ணங்களை ஒன்று சேர்த்தால் வெள்ளை வண்ணம் உருவாகிறது என்று நியூட்டன் கண்டுபிடித்தபோது, ஒரு சாரார், "வானவில் அழகாக இருக்கிறதே. அதை ரசிக்காமல் ஏன் நோண்டுகிறாய்? இயற்கையின் அழகை குடைந்து கெடுப்பதே அறிவியலின் வேலையாக இருக்கிறது!" என்று குறை சொன்னார்கள். ஆனால் ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற விஞ்ஞானிகள் முன் வைக்கும் கருத்து, "விஞ்ஞானம் இயற்கைக்கு எதிரி அல்ல. இயற்கைக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவத்தை கண்டறிவதே அறிவியல்!"
நீல் ஹார்பிஸன் ஒரு எடுத்துக்காட்டு சொன்னார். அவர் சந்திக்கும் மனிதர்களின் முகங்களில் இருக்கும் வண்ணங்களை, ஒலியாய் மாற்றி, "உங்களின் முகம் கேட்பதற்கு இப்படி தான் இருக்கிறது" என்று சொல்லி அவர்களுக்கே அன்பளிப்பாகத் தருகிறாராம். தனது முகத்தின் ஒலி மிகவும் பிடித்து போக, அதைத் தனது கைப்பேசியின் ரிங்க்டோனாக ஒருவர் வைத்துக்கொண்டாராம்!
நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்கால சங்க கவிஞராக காட்சியளித்தார். அந்த காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞான கண்டுபிடிப்பு மூலமாகக் கலை உருவாக்குகிறார்.
சங்க கவிஞர்கள் இப்போது இருந்திருந்தால், எதைப் பற்றி எழுதியிருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற திணைகளை போல, இணையதளத்தை ஒரு திணையாக வகுத்து அதிலிருக்கும் தலைவன் தலைவிகளைப் பற்றி எழுதியிருப்பார்களோ என்றொரு சிந்தனை தோன்றியது. ஓர் இடத்தின் தன்மை அவ்விடத்தில் வாழும் மக்களின் சுபாவத்தோடு ஒத்துப்போனால், அதைத் திணையாக வகுத்தார்கள் என்று நண்பர் மோகன்ராஜ் எனக்கு விளக்கினார். Twitter, Facebook, Youtube, Instagram, Snapchat இவை ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்தால், இவற்றுக்கான தனித்தனி சுபாவங்களும் தன்மைகளும் உண்டு. இவற்றைத் திணைகளாக வகுத்து கவிதைகள் எழுதியிருப்பார்களோ?
அது மட்டும் இல்லாமல், சங்க கவிஞர்கள் உச்சக்கட்ட பரவசமடையக் கூடிய தருணமும் இந்த நூற்றாண்டு தான் என்றே நினைக்கிறேன். ஏனெனில், Virtual Reality என்கிற தொழில்நுட்பத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். டைம் இதழின் இந்த அட்டைப்படமும் அதையே குறிக்கிறது.
Virtual Realityயின் அடிப்படை - கற்பனை உலகம். நமக்கு விருப்பமிருக்கும் வகையில், உலகங்களை அமைத்து, ஒரேயொரு கருவியை தலையில் பொருத்திக்கொண்டு அவ்வுலகுள்ளே சென்றுவிடலாம். யோசித்துப் பாருங்கள் - சங்க கவிஞர்களிடம் சென்று, "உங்களுக்கு விருப்பமான திணைகளை நீங்களே உருவாக்கி, அதில் சஞ்சரித்து, அத்திணையைப் பற்றி கவிதைகள் எழுதலாம்!" என்று சொன்னால் எவ்வளவு பேரானந்தம் கொள்வார்கள்?
"ச்சே! கற்பனையில வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா?" என்று உங்கள் மனம் கேள்வி எழுப்பலாம். ஆனால் எது கற்பனை, எது நிஜம் என்கிற ஆதார கேள்வி இந்நூற்றாண்டில் நம் ஒட்டுமொத்த மனித சமூகத்தை உலுக்கப் போகிறது. Virtual Reality கருவிகளைப் பரிசோதித்து பார்ப்பவர்கள் நின்றுகொண்டே தள்ளாடும் வீடியோவை பாருங்கள்.
Virtual Reality கருவிகளின் வியப்பூட்டும் விஷயமே, அவற்றைப் பொருத்திக்கொண்டபின், உங்களின் மூளைக்கு அக்கருவி காட்டும் காட்சி நிஜம் என்று தோன்றும். மூளைக்கு அவ்வாறு தோன்றுவதால் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தோன்றும். ஆக, மூளைக்கும் உடலுக்கும் ஒரு விஷயம் நிஜமென்று தோன்றினால், அது கற்பனையா நிஜமா?
இந்த கேள்வி மனிதக் குலத்தையே தள்ளாடச் செய்யப்போகிறது. நாம் இதுவரை சுமந்துவந்த பல கற்பிதங்கள், நம்பிக்கைகள் கேள்விக்கு உட்படப்போகின்றன. கற்பனை உலகங்கள் உருவாக்க முடியும் என்றால், ஒவ்வொரு கற்பனை உலகத்திலும் உங்களுக்கு ஒரு ஆளுமை உண்டாக்கிக்கொள்ளலாம். பூமியில் ஆணாகவும், வேறொரு Virtual உலகில் பெண்ணாகவும், இன்னொரு உலகில் இயந்திரமாகவும் கூட ஒரு மனிதன் வாழக்கூடும். ஏன் புதுப்புது பாலினங்களும் உருவாகலாம்.
Ursula Le Guin "The Left Hand of Darkness" புத்தகத்தில் கற்பனை உலகொன்றை உருவாக்குகிறார். அவ்வுலகில் உள்ள மனிதர்களுக்குப் பாலினம் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருக்கும். Isaac Asimov "The Gods Themselves" புத்தகம், வேற்றுக்கிரகத்தில் மூன்று பாலினம் கொண்ட ஜீவராசிகளுக்குள் ஊடல் எவ்வாறு இருக்கிறது என்னும் ஒரு கற்பனை விளையாட்டு. அப்போது கவிதை எழுதப்போகும் சங்க கவிஞர்கள் "தலைவன்", "தலைவி" என்ற இரு சொற்கள் போதாமல், புதுச் சொற்களை உற்சாகமாக உருவாக்கி எழுதுவார்கள். அப்போது "எது சுயம்?" என்ற அடிப்படை கேள்வி எழப் போகிறது.
நீல் ஹார்பிஸன் போன்றவர்கள் "மனிதன் என்பவன் யார்?" என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறார்கள். தன்னை "Cyborg" ஆகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார் நீல். உடலில் இயந்திரங்களைப் பொறுத்துக்கொண்டு புலன்களை விரித்துக்கொண்ட மனிதன். நம்மால் வானவில்லில் உள்ள வண்ணங்களைத்தான் பார்க்க முடியும். ஆனால் நீல் வைத்திருக்கும் ஆண்டெனா மூலம் அவர் புற ஊதா கதிர்களையும், அகச்சிவப்பு கதிர்களையும் உணரலாம். அவரின் ஆண்டெனாவிற்கு இணைய இணைப்புள்ளது. உலகின் எந்த மூலையிலிருந்தும், இணையம் மூலம் அவருக்குப் புகைப்படங்களையோ வீடியோக்களையோ அனுப்பலாம். அவை சப்தங்களாக அவரின் மூளைக்குள் ஒலிக்கும்.
Cyborg Foundation என்றொரு அமைப்பு உருவாக்கி Cyborg ஆக விரும்புபவர்களுக்கு உதவி செய்கிறார். தனக்கு எந்தெந்த புலன்கள் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது தனிமனிதனின் உரிமை என நீல் கருதுகிறார். அவரின் ஆண்டெனா ஒரு புதிய புலன் மட்டுமே. இவ்வாறு பல புலன்களுக்கான ஐடியா அவர் வைத்துள்ளார். தனக்கு விருப்பமுள்ள புலன்களை சேர்த்துக்கொண்டு கலைஞர்கள் கலை உருவாக்கலாம் என்பது அவரின் கனவு. சங்க பாடல்களில் காட்சி, சப்தம், சுவை போன்ற உணர்வுகள் தான் வெளிப்படுகின்றன. ஏனென்றால் அக்கவிஞர்களுக்கு அப்புலன்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது அக்கவிஞர்களுக்கு புது புலன்களைக் கொடுத்து கவிதை எழுதச் சொன்னால்?
Virtual Reality ஒரு வரப்பிரசாதமாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலத்தை விமர்சித்துக்கொண்டு, மனதளவில் கடந்தகால வீர பராக்கிரமங்களில் திளைத்து வாழும் மனிதர்களுக்கு, கடந்த காலத்தை Virtual World ஆக உருவாக்கி, தலையில் கருவியை கவிழ்த்து விடலாம். அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், மற்றவர்களையும் நிம்மதியாக விடுவார்கள்.
அடுத்து artificial intelligence. நமது கைப்பேசியில் இருக்கும் "சிரி" ஒரு குழந்தை. Artificial Intelligenceன் முதல் படி. Artificial Intelligenceன் முக்கிய பலம் எதையும் அதனால் உருவாக்க முடியும், தேவைப்படும் தகவல் இருக்கும் பட்சத்தில். உதாரணத்திற்கு Luka app. Eugenia Kuyda என்கிற பெண் தனது நண்பன் Roman Mazurenko இறந்தவுடன் உடைந்து போகிறார். அது வரையில் ரோமன் தனக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளை ஒன்று சேர்கிறார். அவற்றை artificial intelligence உதவியின் மூலம் ஒரு chat bot ஆக உருவாக்குகிறார். இப்போது உங்களின் கைப்பேசியில் இந்த Luka app டவுன்லோட் செய்து, ரோமன் என்கிற நண்பருடன் உரையாடலாம்.
ரோமன் உயிருடன் இல்லை. ஆனால் உயிருடன் இருந்தபோது எழுதிய குறுஞ்செய்திகளை ஆராய்ந்து கணினியே அவரை போல பேசும். அது தான் artificial intelligence. ஆக, இப்போது ரோமன் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? இந்த app மூலமாக உரையாடுவது ரோமன் என்கிற மனிதனா அல்லது இயந்திரமா? இந்த app பயன்படுத்திய ரோமனின் தாய், தனது மகனை இப்போது மேலும் புரிந்துகொள்வதாக சொல்கிறார். Virtual உலகங்கள் வந்தபின், பூமியில் உங்கள் உடல் அழிந்தாலும், virtual உலகில் இருக்கும் உங்களின் ஆளுமைகள், ரோமன் போலவே அழியாமல் செயல்பட்டுக்கொண்டே இருக்கக்கூடும். Black Mirror என்கிற Netflix தொடரின் "Be Right Back" எபிசோடில் இதை ஆராய்கின்றனர்.
ஒரு எழுத்தாளரோ படைப்பாளியோ மறைந்தபின்னும் அவரின் படைப்புகள் artificial intelligence மூலம் தொடரலாம். அசோகமித்திரன் எழுதிய அணைத்து எழுத்துக்களையும் கணினிக்குள் செலுத்தி, அவற்றை ஆராய வைத்து, தற்கால நிகழ்வுகளையும் அதற்கு அளித்து, அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன கதை எழுதியிருப்பார் என்று பார்க்கலாம். இதற்கான தொழில்நுட்பம் இன்னும் வளரவேண்டும். ஆனால் சில ஆண்டுகளில் இது சாத்தியமே!
மனிதன், மரணம், சுயம், நிஜம். விஞ்ஞானம், கலை, இயற்கை. இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு, எல்லைகள் உடைந்து, DNA சுருள்களைப் போல ஒன்றுடன் ஒன்று பிணையப்போகின்றன. அச்சுருள்கள் உருவாகும் அழகை, அவை நிகழ்த்தப் போகும் நடனத்தை, நமக்குக் கிடைக்க போகும் புது புலன்களுடன் உணர தயாராவோம்!
This is an article in the April edition of Serangoon Times (a Tamil magazine in Singapore). I read 6 Singapore short story collections in English and Tamil and wrote down my thoughts on the similar themes in these books.
சமீபத்தில் சில சிறுகதைத் தொகுப்புகளை படிக்கும் போது எனக்கு சிங்கப்பூர் எம்.ஆர்.டியின் வரைபடம் நினைவுக்கு வந்தது. வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட ரயில் பாதைகள், வெவ்வேறு வளைவுகள், பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று இணையும் நிறுத்தங்கள். இத்தொகுப்புகளின் கதைகள் வெவ்வேறு கருக்களை கொண்டிருந்தாலும், பொதுவான சில புள்ளிகளில் சந்திப்பதாக தோன்றியது. அப்புள்ளிகளை ஆராயலாமே என்ற எண்ணம்தான் இக்கட்டுரை.
பெரும்பாலும் பல்லின கதாப்பாத்திரங்கள் கொண்ட சிங்கப்பூர் சிறுகதைகளைப் படிக்கும் போது எனக்கு பிரியா படத்தின் பாடல் வரி நினைவுக்கு வரும். “சீனர் தமிழர் மலாய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் சேர்ந்து வாழும் சிங்கப்பூர்!” இவ்வாறான கதைகள் போட்டிகளுக்காக எழுதப்பட்டிருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. அம்மாவுடன் ஸ்கைப்பில் பேசும்போது, என் அறையில் எந்தப் பக்கம் குப்பையாக இல்லையோ அந்தப் பக்கம்தான் காமிராவை நான் திருப்புவேன்.
அப்படி காமிராவை திருப்பி எதையும் மறைக்காமல், உள்ளதை உள்ளபடி லதா “நான் கொலை செய்யும் பெண்கள்” தொகுப்பில் எழுதியுள்ளார். மலாய் குடும்பத்தின் வீட்டில் ஓர் அறை மட்டுமே வாடகைக்கு எடுத்துத் தங்கும் இந்திய பெண்ணின் கதை தான் “அறை”. மலாய்க்காரர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும், பெரிதாகப் பேச்சுவார்த்தை நடத்தாமல் அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள். வாடகை கொடுக்கும் போது மட்டும் சில வார்த்தை பரிமாற்றங்கள். ஒரு கட்டத்தில் வீட்டின் உரிமையாளர் இறந்தது கூட தெரியாமல் அறைக்குள்ளே இருக்கிறாள். திடீரென்று அறையின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தால் உறவினர்களின் கூட்டமும் ஒப்பாரியும். தன்னையே அறை ஒன்றிற்குள் பூட்டிக்கொண்டு வெளியுலகில் பயணிக்கும் அனைவரின் பிரதிநிதியாக இக்கதையில் வரும் பெண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதே போன்ற பெண் லதாவின் இன்னொரு கதையிலும் வருகிறாள். “பயணம்” என்கிற இக்கதையில், கனமான பைகளை சுமந்தபடி சீன டாக்சி ஓட்டுநருடன் பயணிக்கிறாள். அனுபவங்களை பகிர்ந்துகொண்டாலும், அப்பெண்ணுக்கும் சீன டாக்சி ஓட்டுநருக்கும் இடையே கண்ணுக்கு தெரியாது சுவர் இருக்கவே செய்கிறது.
எம்.கே.குமாரின் “5.12pm” தொகுப்பில் வரும் “நல்லிணக்கம்” சிறுகதை அந்தக் கண்ணுக்கு தெரியாத சுவரை அங்கத கண்ணாடி வழியே பார்க்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. அனைவரும் நல்லிணக்கத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நக்கலடிக்கும் கதை இது. (பிரியா பட பாடலை இங்கே நினைவுகூரலாம்!) திரு.டேவிட் அவர்களின் வீட்டுக்கு எம்.பீ வரவிருக்கும் நேரத்தில், ஒரு குரங்கு வந்துவிடுகிறது. அதைச் சுற்றி ஒரு கூட்டமே கூடுகிறது. சீன பாட்டியும், மலாய்க்காரரும், எதிர்வீட்டுத் தமிழ் பெண்மணியும் ஆளுக்கொரு விதமாக குரங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் தமிழ் பெண்மணிக்குக் குரங்கு மீது கோபம். தான் கொடுத்த வாழைப்பழத்தை வாங்காமல், சீன பாட்டி கொடுத்த ஆரஞ்சை வாங்கிவிட்டதாம்!
Jeremy Tiang எழுதிய “It Never Rains on National Day” தொகுப்பில் வரும் “National Day” என்கிற கதை, இங்குப் பிறந்து வளர்ந்தவர்களுக்கும், வேலைக்காகக் குடியேறி வந்தவர்களுக்கும் இடையே சில சமயங்களில் ஏற்படும் இறுக்கத்தைச் சுட்டுகிறது. தேசிய தினத்தன்று, கட்டட தொழிலாளிகள் ஒரு குழுவாக அருகிலிருக்கும் தீவுக்கு செல்கிறார்கள். அங்கிருந்து வானவேடிக்கைகளை பார்த்துவிட்டு, உணவு சாப்பிட்டு இரவைக் கழிப்பது தான் திட்டம். குளிர்காய்வதற்குச் சிறிய தீ மூட்டியதும் அங்கிருக்கும் இன்னொரு கும்பலை சேர்ந்த ஒருவர் ஓடி வந்து “இங்கு தீ பற்ற வைக்கக் கூடாது!” என்கிறார். “நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லையே” என தொழிலாளிகள் சொல்லியும், “தீ பற்ற வைக்கக்கூடாது என்பது விதி! விதிகளைக் கடை பிடிக்கமுடியாவிட்டால் உங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்லுங்கள்!” எனக் கோபமாக கத்துகிறார். அவரிடம் வாதிட முடியாமல் அனைத்துவிடுகிறார்கள்.
“மோர்கன் எனும் ஆசான்” கதையிலும் இதே “நீயா நானா” தான். ஆனால் இருவேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் அல்ல. தமிழர்களுக்குள்ளேயே பிரிவினை! சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த ‘மோர்கன்’ என்னும் முருகன், இந்தியாவிலிருந்து வந்தவர் மளமளவென வளர்ச்சியடைவதைக் கண்டு பாதிப்படைகிறார். மோர்கன் மீது தீர்ப்பேதும் அளிக்காமல் எழுதிப்பட்டிருக்கும் அருமையான கதை. “5.12pm” தொகுப்பின் மிகச் சிறந்த கதையும் இதுவே.
லதாவும் எம்.கே.குமாரும் விவரிக்கிற பிரிவினைகளை “மாறிலிகள்” தொகுப்பில் இரு கதைகளில் சித்துராஜ் பொன்ராஜ் தகர்த்தெறிய முயல்கிறார். இன எல்லைகளைதாண்டி நடக்கும் உரையாடல்கள்தான் “இரண்டாம் வாய்ப்பாடு”. இந்திய ஆணுக்கும் பிலிப்பினோ பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்கிறது. இருவரும் என்.யூ.எஸ்ஸில் ஆராய்ச்சி செய்பவர்கள். நன்கு படித்தவர்கள். ஆனாலும் இந்திய ஆண்மகனுக்கு பிலிப்பினோ பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் ஏதோவொரு மனத்தடை இருக்கிறது. வீட்டில் தீபாவளி கொண்டாடுவது போல மனதில் கற்பனை செய்து பார்க்கிறான். அம்மா சமைத்துக்கொண்டிருப்பாள், அப்பா ஏதாவது படித்துக்கொண்டிருப்பார், தங்கை பட்சணம் தின்பாள். இந்தச் சூழலில் தனது பிலிப்பினோ காதலி பொருந்தவேமாட்டாள் என நினைக்கிறான். இந்திய ஆணுக்கும் ஜப்பானிய பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் கதை “தாளோரா நாரைகள்”. சித்துராஜ்ஜின் இரு கதைகளிலும் இடைவெளிகளைத் தாண்டிச்செல்ல கதைமாந்தர்களிடம் ஏதோவொரு மனத்தடை தெரிகிறது.
2014ல் சிங்கப்பூர் இலக்கிய விருது வென்ற “Ministry of Moral Panic” என்ற தொகுப்பை எழுதிய Amanda Lee Koeவும் இதே மனத்தடையைத் தொட்டிருக்கிறார். “Every Park on This Island” கதையில் சிங்கப்பூர் யுவதியும் அமெரிக்க இளைஞனும் சிங்கையிலுள்ள ஒவ்வொரு பூங்காவாக சுற்றுகிறார்கள். அவர்களுள் நடக்கும் உரையாடல் தான் கதை. ஒரு நாள் உணர்வுகள் பொங்க செடிகளுக்கு நடுவே தீண்டல்கள் சூடு பிடிக்கின்றன. ஆனால் ஏனோ தொடர முடியாமல், அமெரிக்க இளைஞன் தலையை குனிந்தபடி உட்கார்ந்துகொண்டு “என்னால் ஆசிய பெண்ணுடன் முடியாது“ என்கிறான். இக்கதையில் வரும் ஆசிய அமெரிக்க பரிமாற்றங்கள் அருமை. “சிங்கப்பூரைப் பற்றி சொல்” என்று அவன் கேட்க, “சிங்கப்பூரில் எளிதாக நடக்கலாம். மியூசியம், மால், எங்க வேணாலும் நடக்கலாம். ஆனா மியூசியம்ல உண்மையா எதுவும் இல்ல. மால் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்” என்பாள். அவள் அமெரிக்கா பற்றிக் கேட்கும் போது, “என் ஊர்ல ஏர்போர்ட் கூட கிடையாது. பக்கத்து மால்க்கு போக அரை மணி நேரம் கார் ஓட்டிக்கிட்டு போகணும். அதுவும் 4 மாடி தான் இருக்கும். உன்னால கற்பனை செஞ்சு பார்க்க முடியுதா? இங்கயே இருந்துடலாமான்னு தோணுது” என்பான் அமெரிக்க இளைஞன். வெவ்வேறு கண்ணோட்டங்கள்!
இதுவரை பார்த்த கதைகள் போலல்லாமல், இடைவெளிகளை உணர்வுகளால் தாண்டிவிடலாம் எனக் காட்டுகிறது “Birthday”. “Corridor: 12 short stories” என்கிற தொகுப்பில் Alfian Sa’at எழுதிய கதை. கலா என்கிற இந்திய பெண்ணுக்கும் ரோஸ்மினா என்கிற இந்தோனேசிய பெண்ணுக்கும் வேலையிடத்தில் ஏற்படும் நட்புதான் கதையின் கரு. வேலையில் சேரும் ரோஸ்மினா கர்ப்பமாக இருக்கிறாள். பிள்ளை பெற்றெடுக்க வேண்டும் என்கிற ஆசையோடு இருக்கும் கலாவிற்கு, உப்பிய வயிறுடன் ரோஸ்மினாவை பார்த்ததும் நெருக்கம் ஏற்படுகிறது. இரவு நேரம் கிளார்கியில் நதியருகே இருவரும் அமர்ந்து பேசும் விஷயங்கள், சில வேளைகளில் இனமத வேறுபாடுகளை உணர்ச்சிகள் தகர்த்தெறிந்துவிடுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம்.
இதுவரை நான் குறிப்பிட்ட 6 தொகுப்புகளிலும் வேறு சில பொதுவான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்து பார்ப்போம்.
பணிப்பெண்கள்
பார்த்ததும் டக்கென பரிதாபப்பட சிங்கையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒன்று பணிப்பெண்கள். இன்னொன்று கட்டிட தொழிலாளிகள். குடும்பத்தைப் பிரிந்து எப்படி வாடுகின்றனர் பாருங்கள்! முதலாளிகள் எப்படி கொடுமை படுத்துகிறார்கள் பாருங்கள் எனச் சட்டை காலரைப் பிடித்து உலுக்கும் கதைகள் பல படித்ததால், இப்போதெல்லாம் காலர் இல்லாத சட்டைகள்தான் அணிகிறேன்.
அப்படிப்பட்ட கோஷங்கள் எதுவுமில்லாமல் மனதை உலுக்கிய கதை தான் அமேண்டா எழுதிய “Two Ways to Do This”. இந்தோனேசியாவில் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கைக்குத் தப்பிவருகிறவள் தான் சுரோத்துல். இங்குள்ள மெயிட் ஏஜென்சியில் சேர்ந்து பயிற்சி பெறுகிறாள். பொம்மைக்கு பால் ஊட்டுவதிலிருந்து, “sir”, “madam”, “sorry” என்ற ஆங்கில வார்த்தைகள் கற்றுக்கொள்வதுவரை பல விதமான பயிற்சிகள். ஒரு தம்பதி அவளைத் மெயிட்டாக தேர்ந்தெடுக்கின்றனர். சுரோத்துல் தன்னை தேர்ந்தெடுத்த முதலாளியுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறாள்.
சுரோத்துல்லை தூண்டுவது காமம் அல்ல. எல்லா விதங்களிலும் தனது முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வீட்டில் யாரும் இல்லாதபோது முதலாளியம்மாவின் உடைகளை அணிந்து பார்ப்பாள். மெத்தையில் அவள் உறங்கும் பக்கம் படுத்துப்பார்ப்பாள். இவர்களின் உறவு பற்றி முதலாளியின் மனைவிக்குத் தெரியவரும்போது, சுரோத்துல்லை வேலைவிட்டு மட்டுமில்லாமல் நாடு விட்டே நீக்குகிறார்கள். அவளுக்கோ அதிர்ச்சி. வேலைப் போனதற்காக அல்ல. “மனைவி என்ன செய்கிறாள்? நான் தான் வீட்டைச் சுத்தம் செய்கிறேன். அவரின் அம்மாவைக் கவனித்து கொள்கிறேன். அவருக்கும் சுகம் தருகிறேன். எதுவும் செய்யாத மனைவியுடன் இருக்க அவர் என்ன முட்டாளா?” விவகாரம் வெளிப்படும் போது அவர் தனது மனைவியின் பக்கம் இருப்பது அவளுக்கு புரியாததொன்றாய் இருக்கிறது. கிட்டத்தட்ட எந்திரன் திரைப்படத்தில் வசீகரனிடம் அப்படி என்ன இருக்கிறது என்று சனாவிடம் கேட்கும் சிட்டியின் எண்ணவோட்டம் போல.
லதாவின் “நாளை ஒரு விடுதலை” கதையில் வரும் பணிப்பெண் பேருந்தில் அமரும் போது பக்கத்தில் இருப்பவர்கள் சற்று திரும்பிக்கொள்வதைக் கவனிக்கிறாள். கண்ணாடியில் தனது பிரதிபலிப்பைப் பார்த்தால் தன்னையே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வேலை எல்லாம் முடித்து இரவு படுக்க போகும் போதுதான் சாப்பிடவேயில்லை என நினைவு வருகிறது. இப்படிப்பட்ட விவரங்கள் கதையை இன்னும் உண்மையாக்குகிறது.
கட்டிட தொழிலாளிகள்
முன்னே குறிப்பிட்ட “National Day” தொழிலாளிகளுடன் வாக்குவாதம் செய்யும் சிங்கப்பூரியர் பற்றிய கதை. இக்கதையில் ஓர் அழகிய தருணம் - படகில் செல்லும்போது சிங்கப்பூரின் வான்வரை கண்ணில்படும். “அதோ அங்க இருக்கற கட்டிடம் என்னுது. நான் கட்டியது” என்று ஒவ்வொரு தொழிலாளியும் தான் வேலைபார்த்த ஒவ்வொரு கட்டிடத்தையும் சுட்டிக்காட்டுவான். சித்துராஜ்ஜின் “முல்லைவனம்” என்கிற கதையில் எச்.டீ.பி கட்டிடத்தில் காவலாளியாக வேலை செய்யும் ஒருத்தர் கிளாரினெட் வாசிப்பவராக வருவார். இரண்டு கதைகளும் குறைந்த ஊதிய தொழிலாளிகளின் நிலை பற்றி மறைமுகமாகக் கருத்து தெரிவிக்கின்றன. காலரைப் பிடித்து இழுக்காமல் காதுக்குள் ஊசியை நுழைக்கின்றன.
மூன்றாவதாக ஒரு கதை, இத்தொழிலாளிகளின் வாழ்வியல் பிரச்சனையை அணுகுகிறது. அது எம்.கே.குமார் எழுதிய “பெருந்திணைமானி”. மொத்தம் பதினாறு பேராக ஒரே அறையில் தங்கி வேலைக்குச் செல்பவன் தான் அழகன். தனிமை என்பது அவனுக்கு இரவிலும் கிடையாது. இரவானால் சுயஇன்பம் கொள்வதை இன்னொரு தொழிலாளி கிண்டல் செய்கிறான். அமேண்டா எழுதிய “Pawn” கதையிலும், ஒரு சீன தொழிலாளிக்குத் தனது ரூம்மேட்டுகள் மீது கோபம் வரும்போது தனி அறை ஒன்றுக்குள் சென்று கதவை சடாரென்று சாத்திக்கொள்ளவேண்டும் போல இருக்கும். ஆனால் அப்படியெங்கும் செல்லயிலாது என்று தெரிந்தவுடன் கோவம் தணிவது போல எழுதியிருப்பார். ஒரே அறையில் பல பேருடன் வாழ்வதிலான சிக்கல்களை ஆராயும் கதைகள் இவை.
உறவு எல்லை கோடுகள்
கோமளாஸ்ஸில் தோசை சாப்பிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும். அங்கே தோசையுடன் கோக் அல்லது பெப்சி மீலாக வாங்கலாம். சிங்கப்பூரும் அப்படிப்பட்ட ஒரு கலவைதான். சாவிக்கொத்துகளிலிருந்து டி-சட்டைகள் வரைக்கும் ஆட்சிபுரியும் மெர்லயனும் ஒரு கலவை தானே? இந்த மெர்லயனை குறியீடாக வைத்து “Siren” என்றொரு சிறுகதை அமேண்டா எழுதியிருக்கிறார். பெண் உடையை அணிந்து வாடிக்கலையாளர்களை சுண்டியிழுக்கும் ஆண்மகனின் கதை. ஆங்கிலத்தில் இவர்களைக் குறிக்க Ladyboy என்ற சொல்லிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவனைப் பள்ளிக்கூட நண்பன் தெருவில் பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். அவனை ஆணாக மட்டுமே பள்ளியில் பார்த்திருக்கிறான். ஓர் இரவு ஒன்றாகக் கழிக்கிறார்கள். மெர்லயன் எனும் தொன்மத்தை இப்படி திருநங்கைக்கு குறியீடாக வைத்து அழுத்தமான கதை எழுதியதற்கு அமேண்டாவை பாராட்டவேண்டும்.
லதாவும் தொன்மத்தைத் தகவமைத்து “படுகளம்” என்றொரு கதை எழுதியிருக்கிறார். அபிமன்யு போல ஒரு பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி தீமிதியை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் கதை இது. சித்துராஜ்ஜின் “மோகவல்லி” கதையில் பெண்ணாக மாறிய நடேசன் என்கிற நடாஷா, தன்னைப் பெண்ணாக நிரூபித்துக்கொள்ள டேங்கோ நடனம் கற்கிறார். சமூகம் அமைத்த எல்லைகளை அவரால் கடக்க முடிகிறதா என்பதைக் கதை ஆராய்கிறது. “Cubicles” என்கிற கதையில் Alfian Sa’aat பாலிடெக்னிக்கில் படிக்கும் இரு யுவதிகளுக்கு இடையேயான உறவைச் சொல்கிறார். வாய்ப்புக்கிட்டும்போதெல்லாம் கழிவறையின் அறைகளினுள்ளே சேருகிறார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனசிதைவை கதை ஆராய்கிறது. செக்ஷன் 377ஏ பற்றி பலர் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்க, “மக்களின் மன நிலையைப் பிரதிபலிக்கும் அரசாகத்தான் சிங்கை இருக்கும்” என பிரதமர் லீ சியன் லூங் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டார். இக்கதைகள் மக்களின் மனநிலையை மாற்றுமா என்றெனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நம்மிடையே வாழும் மெர்லயங்களின் வாழ்வை, உணர்வுகளை புரிந்துகொள்ள உதவும்.
தொடல் கிட்டாத பெண்
சித்துராஜும் அமேண்டாவும் உருவத்தால் புறக்கணிக்க படுகின்ற பெண்ணை பற்றிக் கதை எழுதியுள்ளனர். “கர்ணயட்சிணி” கதையில் வரும் பெண் எந்த ஆணுடனும் உறவு வைத்துக்கொண்டதே இல்லை. கதையின் முடிவில் பெண்களும் அவளைப் புறக்கணிக்கும் அளவிற்கு ஆகிவிடுகிறது. அமேண்டாவின் “Pawn” கதையின் முதல் வரி - “டீலாவை பார்த்ததுமே சொல்லிவிடலாம் அவளை இதுவரை ஒரு ஆணும் தீண்டியதில்லை.” டீலாவிற்கு உணவுக்கடையில் வேலைசெய்யும் சீன ஊழியனை பிடித்துபோகிறது. அவனை டின்னருக்கு அழைத்துச்செல்கிறாள். அவனுக்கு பொருட்கள் வாங்கி கொடுக்கிறாள். “உன் மூஞ்சிய பாக்க சகிக்கல!” என்று அவன் கத்திவிட்டு எழும்போது, “போகாதே. உட்கார். நீ என்னோட இருக்க நான் காசு தரேன்” என்கிறாள். “எவ்வளோ?” என்று இவன் கேட்கிறான். பிறகு இருவரும் கைகோர்த்துக்கொண்டு கிளார்க்கி வழியே நடந்து செல்கையில் மற்ற பெண்களின் பொறாமையான பார்வை இவர்கள் மீது விழுகிறது. அந்த பார்வைகளை விழுங்கிக்கொண்டபடி நடக்கிறாள்.
மத வேற்றுமை
நான் தங்கியிருக்கும் காமன்வெல்த் பகுதியில் உள்ள தேவாலயத்தில் தான் பல வருடங்களுக்கு முன் பிரியா படத்திற்காக ரஜினிகாந்த் ஸ்ரீ தேவியை தேடி திரிவார். தேவாலயம் பக்கத்திலேயே முனீஸ்வரன் கோவில். இதைக் கடந்து செல்கையில் என் பாட்டி கைகளைக் கூப்பி முனீஸ்வரனுக்கும் ஏசுவுக்கும் சேர்த்தே ஒரு கும்பிடு போடுவாள். இப்படிப்பட்ட சிங்கை எப்போதும் இவ்வாறு இருந்ததில்லை. மரியா ஹெர்ட்டோ என்ற பெண்ணுக்காக 1950ல் ஒரு மதக் கலவரம் நடந்துள்ளது. அமேண்டா எழுதிய “The Diary of Maria Hertogh” கதை படிக்கும்போது தான் எனக்கு இது பற்றி தெரிய வந்தது. மேட்டர் இது தான். யூரோப்பிய பெண்மணி தனது மகளை ஒரு மலாய் குடும்பத்திடம் கொடுத்துவிட்டாள். அந்தச் சிறுமி தான் மரியா. மலாய் குடும்பம் அவளை முஸ்லீமாக வளர்க்க துவங்கியது. நத்ரா எனப் பெயர் மாற்றுகிறது.
ஆனால் சில வருடங்களில் யூரோப்பிய தாய் திரும்ப வந்து குழந்தையை கேட்கிறாள். சட்டப்பூர்வமாக எடுத்துக்கொண்டும் சென்றுவிடுகிறாள். அவளை திரும்ப கிறிஸ்தவராக மாற்றுகிறாள். இதனால் மதக் கலவரம் மலாயாவிலும் சிங்கையிலும் வெடிக்கிறது. அந்த சிறுமி நாட்குறிப்புகள் எழுதியது போன்ற தோரணையில் இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. மரியா வளர்ந்து கடைசியில் அமெரிக்காவில் ஏதோவொரு பெயர்தெரியாத விடுதியில் மேஜை அலமாரியைத் திறக்கும் போது, அதில் ஒரு பைபிளும் ஒரு குரானும் இருக்கிறது. இவை மேலே புத்தரின் புத்தகமும் இருக்கிறது. இவ்வாறு கதை முடிகிறது. “முகாந்திரம்” என்கிற கதையில் லதாவும் மதத்தினாலும், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் உலகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால், சிங்கையிலுள்ள மக்களின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வெவ்வேறு மதங்களைச் சார்ந்த நண்பர்களுக்கு இடையிலும் இது பிரிவுகளை ஏற்படுத்துகிறது.
விதி-உணர்வு மோதல்
பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நகராமல் நின்றிருந்ததைப் பார்த்து, ஏதோ பிரேக்டவுன் போல என்று நினைத்தேன். ஆனால் என் நண்பன் சொன்னான், “வேகமா ஓட்டிட்டு வந்திருப்பார். அடுத்த ஸ்டாப்புக்கு சீக்கிரமா போக கூடாது பாரு.” இப்படி எல்லாமே சரியான நேரத்தில், சரியான முறையில், பிசகு தட்டாமல் நடைபெறும் மாபெரும் அற்புதம் சிங்கப்பூர். விதிகள். நெறிமுறைகள். இவற்றால் சிக்கல் ஏற்பட முடியுமா? Jeremy Tiang எழுதிய “Harmonious Residences” கதையில் விபத்தில் உயிரிழந்த சீன கட்டிட தொழிலாளியின் மனைவி அவரின் உடலை அப்படியே சீனாவுக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறாள். ஆனால் செயல்முறைப்படி உடல் இங்கு எரிக்கப்படவேண்டும். சாம்பலை எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள். இதைக் கேட்டவள் சினமுற்று என்ன செய்கிறாள் என்பது தான் கதை. அமேண்டாவின் “The King of Caldecott Hill” கதையில் தற்கொலை செய்துகொண்ட வெள்ளைக்காரரைப் பற்றி அவரைக் கடைசியாக சந்தித்த ஜப்பானிய உணவக பணிப்பெண்ணிடம் விசாரிக்கிறார்கள். அவளின் உணர்ச்சியை புரிந்துகொள்ளாமல் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார்கள். எம்.கே.குமாரின் “பதி சதி விளையாட்டு” என்கிற கதையிலும் இதே விஷயம் தான். வர்க் பெர்மிட் வைத்திருக்கும் நண்பரின் மனைவியை மெயிட்டாக சிங்கைக்கு அழைத்துவர ஒருவர் உதவுகிறார். ஆனால் எம்.ஓ.எம்மிற்கு விஷயம் தெரிந்து போக, வீட்டுக்கு சோதனை செய்யவரும்போது மாட்டிக்கொள்கிறார். கதை படிக்கும் எவருக்கும், “சே பாவம்! வர்க் பெர்மிட் வெச்சிருக்கறவங்க மனைவி கூட இருக்க எவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு” என்று தோணும். ஆனால் விதிகளின் படி அவர்கள் செய்தது குற்றம். உணர்வுகளுக்கும் விதிகளுக்கும் ஏற்படும் மோதல்களை இது போன்ற கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.
இக்கதைகள் அனைத்தும் என் மனதில் எம்.ஆர்.டி வரைபடம் போன்றதோர் சித்திரத்தை உண்டாக்கியுள்ளன. ஒன்று பக்கத்தில் ஒன்றும், தள்ளியும் அதனதன் இடங்களில் இவற்றை வைத்துப்பார்த்தால், குத்துமதிப்பாகச் சிங்கப்பூரின் வரைபடம் கிடைத்துவிடும். ஆனால் எல்லா நாட்டின் இலக்கியம் போல இன்னும் நிரப்பப்படாத பல இடங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து நிரப்புவது தற்போதைய எழுத்தாளர்களின் கடமை.
இந்தக் கதைகளைக்கொண்ட எல்லாத் தொகுப்புகளையும் கண்டிப்பாகப் படியுங்கள். மேம்போக்காகச் சிங்கப்பூரின் பிரச்சனைகளைச் சொல்லிச்செல்லும் கதைகளாக இல்லாமல், ஆழமான கேள்விகளை எழுப்பும் கதைகள் நிரம்பியிருக்கின்றன. தொகுப்புகளின் பட்டியல் கீழே. அவசியம் படியுங்கள்.
There’s a niche problem in Tamil cinema. No, it’s not Atlee or all the commercial atrocities committed on screen. People will be more interested in Samantha’s silambattam than the death of one of India’s finest writers. I’ve made my peace with this universal truth.
There’s a whole bunch of young filmmakers who’re making their entry into films, but lacking a certain maturity and perspective of life. I felt comparing 8 Thottakkal (8 Bullets) to Stray Dog, the film it was inspired from, would be a good case study of this problem.
The basic plot of both films are the same.
A rookie police officer’s gun gets stolen on a bus and he needs to find it. With the able guidance of a senior police officer, while he’s on the quest to find it, crimes begin to happen in the city for which his gun is used.
Fantastic! Now let’s see how Kurosawa and Sri Ganesh handle the same plot.
(SPOILERS AHEAD! Please read only if you’ve watched both films!)
The Setting
In Stray Dog, it’s post world war Japan. The setting alone is telling you many things. The poverty. The angst. It’s already indirectly suggesting to you what the cause for the robbery might be. It gives you a clear picture of the haystack in which the protagonist needs to find the needle. When Detective Murakami, the protagonist, searches the streets in the disguise of a vagabond, we get to see the inhabitants of the city in which the gun was stolen. There’s a specific sense of period and location that’s evoked. And the story brews out of the setting.
In contrast, 8 Thottakkal is set in a generic city during a generic time period. There’s absolutely no specificity.
Love Interest
8 Thottakkal has a love interest for the protagonist and two duets. In Kurosawa’s script, I don’t even have to say.
The showgirl
Harumi Namiki is a showgirl who’s the criminal’s love interest in Stray Dog. In 8 Thottakkal too, one of the criminals has a love interest and he plans to elope with her. In fact, he goes to the extent of stealing a necklace for her. This woman in 8 Thottakkal is merely there. There’s no detailing to her character.
In contrast, the showgirl in Stray Dog has greater depth. When the detective interrogates her, she tells him that one day when they were walking down the road, she saw a splendid dress in one of the shops and wished she could wear it at least once. The criminal looked at her with the saddest expression and then one week later he brought her that dress. Despite knowing that he committed a crime to get it for her, she says, “He committed a crime for me. But, I’d have stolen it myself if I had the guts. They deserve it for flaunting these things. We have to do worse than steal if we want things like this. It’s the world’s fault. A world where people steal a vet’s knapsack!”
In 8 Thottakkal, the love interest never asked for a necklace. We don’t even know what that woman wants in life. We know nothing about her other than the fact that she’s cheating on her husband. Whereas in Stray Dog, Harumi Namiki is a reflection of the mindset of the have-nots.
The Mani Ratnam Effect
This paragraph is a rant so you can skip it if you want. In the final scene of 8 Thottakkal, when all problems have been resolved, the protagonist emerges with a crisp, white shirt without blemishes. Can we please stop having such symbolisms? I understand Mani Ratnam is a great filmmaker and black, grey and white are very interesting colours. But, we need to work on what to do next. We need to stop worshipping him and make better films than what he’s done. This kind of symbolism is going to prevent our cinema from evolving.
The cop’s guilt
There comes a beautiful moment in Stray Dog, when Detective Murakami realises that the man who bought his gun from the gun dealer was about to return it without committing any crime. But, when Murakami raided the dealer’s den, the man escaped and the next day he committed a crime. So in his heart, the detective feels extreme guilt that he was the one, who instigated the criminal to commit an act of violence.
At a later point, Detective Murakami feels sorry for the criminal. And that’s when the more experienced Detective Sato tells him, “Thinking like that won't get you anywhere as a cop. It's easy to develop delusions, chasing criminals all day. We can't forget the many sheep a lone wolf leaves wounded. There's no help for a cop who doesn't believe he's protecting the masses. I say leave the psychoanalysis to the detective novels.”
Stray Dog isn’t just a hunt for a stolen gun. It’s also the coming of age story of a sensitive rookie cop. And you don’t find this in 8 Thottakkal. It’s just not there!
(Side remark: Lone wolf and sheep? Hey! Did Mysskin get his title idea from this line?)
Getting your knapsack stolen
The climax of 8 Thottakkal shows you the protagonist at a traffic signal, staring at a man who ruined his life. So the director ends the film with the suggestion that there’s a criminal snoozing within each one of us and it’s about the choices we make when we’re at a particular juncture in our lives. Okay let’s assume this is a great philosophy. But how do you convey it through the medium of cinema?
Here are 3 brilliant things Kurosawa does.
Throughout the film every single character is sweating. The film is set during a particularly blistering summer in Japan. As a result, everyone from the detective who lost his gun, the criminals he interrogates, the thief, every single police official, the showgirls, the commoners, everyone is sweating. Everyone’s reaching out for a fan to stop from sweating. And there you have it! He has conveyed to you visually that every single person is in the same state!
The detective visits the house of Yusa, the guy who’s committing crimes with the stolen gun. Yusa’s sister tells him that he was disillusioned with his life when all his belongings were stolen on a train. And later we learn that the detective too had his belongings stolen at one point in his life. The detective says, “I was half out of my mind with rage. I could have pulled off a robbery back then. But, I realised I’d hit a dangerous crossroads, deliberately chose another way and got myself this job.” Thus, the suggestion that it’s the choices we make is embedded into the narrative.
When the detective finally catches hold of Yusa after a long-winding chase, he shackles his hands. Kurosawa has an exquisite frame at this moment. Both of them lie panting on the ground for breath, one with his hands shackled and the cop with his stolen gun finally back in his hands. No words exchanged. It’s a silent moment as both the chased and the chaser do the same thing. Breathe.
The Criminal’s Motive
And there’s another brilliance to this scene. Just as they lie in this manner, a group of children pass by singing a song. And for some unknown reason, the criminal bursts out crying. A deep wail that shocks the detective. And that’s all Kurosawa gives you. There’s no monologue of the criminal, talking about his life. There’s no justification given for what he did. All that you get are bits and pieces about the criminal that’s uncovered during his investigation. As the viewer, you’re left to piece together the puzzle.
This is what his sister says about him. “Ever since he got home from the war, he’s like a stranger. His knapsack and everything he owned was stolen from him on the train ride home. He turned bitter.”
This is what his brother-in-law says. “He’s always blaming the world, the war. Like he’s carrying all of Japan’s problems, but he never lifts a finger.”
When asked when she last saw him, his sister says, “He didn’t come when the dinner was ready. I found him sitting here in the dark, crying, his head in his hands.”
And in his room, they find a poem he had scribbled on a piece of paper.
Another sleepless night
I hear that alley cat crying over the rain
The one who followed me through the storm
It’s only going to suffer and die
Better to kill it once and for all
I still remember how it felt
When I crushed it with my foot
I’m a coward
Just like that rain-drenched cat
What’s the point...
This is all you get! Why did Yusa burst out crying? Why did he do what he did? Was it trauma caused by war? Was it loneliness? Was it his inability to make a life for himself? What’s his poem trying to say? Kurosawa doesn’t give you the answers.
In 8 Thottakkal, MS Bhaskar, a terrific actor, plays the equivalent of Yusa’s character. In his desperation to make his character strong, the director throws in all sorts of stuff. He has a conversation scene in which MS Bhaskar shares his life story. Then, we’re told he was suffering from cancer all along. Before dying, he even says he didn’t steal money to cure himself, he simply wanted to live with pride. He also expresses his regret for having killed a little girl by mistake. Talk talk talk. When Mahendran began making films, he was deeply dissatisfied with films of his time. He felt they were more “talkies” than cinema. And that’s true even today!
Now, compare this to the single, unexplained wail in Stray Dog and his poem. I rest my case.
So what’s the problem?
You cannot make great cinema simply by watching the world’s best cinema. You need to have the ability to grasp the nuances and soul of a great work of art. (And Stray Dog isn’t Kurosawa’s best even!) One of the reasons why directors like Balu Mahendra, Mysskin and Mahendran emphasise literature is because reading can help you gain that ability to see the significance of details. It’s perhaps Balu Mahendra’s rigorous training that has helped Vetrimaaran have the maturity to adapt Bicycle Thieves to Indian milieu brilliantly. But, literature isn’t the only way. You could gain maturity from direct life experiences too.
The problem with the good movies in Tamil cinema is that they’re mostly “inspired” cinema. A concoction of Quentin Tarantino, Guy Ritchie and Mani Ratnam, with varying proportions depending on the filmmaker’s tastes. And this inspiration is more surface-level inspiration. The young filmmakers are mesmerised by the flourishes, the cuts, the angles and snazzy bgm. As a result, these new wave films have polish, some exciting filmmaking techniques but no solid core. They’re like the very first drawings we make by looking at other great artwork. They’re like kids reciting the hero’s dialogues at home, without understanding a word that was spoken.
I don’t mean to dismiss 8 Thottakkal as a “copy”. (Here’s a review by Baradwaj Rangan that points out the good things about it.) It’s always good to get inspired by other works of art. But, you need to have a perspective, a vision of what your art stands for. And that core has to grow within you organically. It cannot come from outside.
During a rare television interview, while Bala shifted in his seat, the interviewer noticed some strange beads around his neck. When questioned about it, Bala said, “It was given to me by an aghori from Kasi. They’re people who eat dead bodies but isn’t there an artist inside everyone? He eats one person every other day, collects a small piece of bone from each carcass, shaves it patiently into the shape of a skull and keeps it with him. Once he collected 108 such pieces, each from a different person, he strung it into a chain and gifted it to me.”
That’s filmmaker Bala for you. He began his career as an assistant to Balu Mahendra (the director of Sadma. We’ll delve into his films in a later article!). He went on to make his first film Sethu in 1999 and until today, in a span of 18 years, he’s made only 7 films. His fourth film Naan Kadavul earned him the National Film Award for Best Direction in 2010.
To understand Bala and his work further, here are two films you can begin with.
Naan Kadavul
Naan Kadavul has two parallel story arcs that come together in the end. One is the story of Rudran, a boy deserted in Varanasi by his parents, who grows to become an aghori and returns to his native village in South India on the bidding of his guru. “You’ll know when it’s time to return,” his guru tells him. The other story arc is that of a blind beggar girl and her begging cohort, who’re kept enslaved in a dingy, underground den by Thaandavan.
Trivia: Rudran, the aghori played by Arya in the film, wears the same chain of skulls as Bala.
Pithamagan
Pithamagan is the story of Chithan, an orphan who grows up in a graveyard and befriends Shakthi, who makes a living by selling petty items with cooked-up stories. There’s also a woman who sells drugs and a simpleton girl who gets easily duped. The film explores the bonds that form between these four misfits and whether Chithan can fit into normal society.
A song from Pithamagan gives you a beautiful snapshot of their relationship.
Watching these two films will give you a taste of Bala and help you easily identify five distinct tropes that make his films stand out.
Raw Realism
From the plots of Naan Kadavul and Pithamagan, it must be apparent that Bala tends to focus on lives of people we brush aside out of fear or repulsion. His characters are people we rarely encounter or have no need to meet. They’re people who either step aside or have been forced to stand aside. Yet, when they appear on screen, they feel real and close to us. This realism is Bala’s biggest strength and has stuck on as his identity. Other Tamil filmmakers from the realism wave like Balaji Sakthivel, Vetrimaran and Manikandan present a carefully constructed and chiselled realism. Bala’s films meander with a certain unrestrained rawness, just like his characters. These rough edges around the corner make his films more realistic.
While portraying reality, he doesn’t pity his characters and neither does he want you to pity them. There’s no attempt to make realism seem poetic. Naan Kadavul nudges us to take notice of the world under our feet, the world we look away from as we saunter off after dropping the customary coin. In fact, in Naan Kadavul the beggars hate being pitied. You won’t notice a single shot in which Bala shows you the face of a person feeling sorry. You’ll only see coins dropping into bowls or legs walking past them. There’s even a moment when a beggar remarks, “These people who visit the temple believe dharma will save them and give us money. Let’s have some pity for them and accept their alms so they’re saved!”
Trivia: Anurag Kashyap felt inspired by the realistic portrayal of his hometown Varanasi in Naan Kadavul.
Solitary Netherworlds
Each one of Bala’s films can be seen as an elaborate depiction of a living hell. Sethu was the story of a man, who escapes from a mental asylum after regaining his sanity, only to realise his lover is dead. Nandha is the story of a young boy who kills his abusive father, only to lose his mother’s love forever. In Paradesi, a bunch of people migrate to a tea estate in the hopes of improving their standard of living only to realise they’re hopelessly enslaved for the rest of their lives. His films keep revisiting the same point that life is an arduous, never-ending journey from one suffering to another. His characters are almost always like bugs caught within a glass jar with a flame burning at its centre. They keep trying to climb out of it but keep falling back into the fire. The netherworld-like underground den in Naan Kadavul is the perfect visual representation of Bala’s entire gamut of films. You walk down a few dark steps, enter this underground lair and you’ll find each of Bala’s characters down there, whimpering in their solitary hells.
Cunning Commercialism
Bala’s protagonists are almost always larger-than-life heroes. They have the traditional intro songs that are staples of a Vijay or Ajith film. For example, the lyrics of Rudran’s Om Sivoham or Chithan’s Piraiye Piraiye help us understand the background of these characters but also gives them ample hype. In fact, Om Sivoham’s lyrics are completely in Sanskrit, blaring out the supreme qualities of Lord Shiva! He doesn’t shy away from staging stunt sequences in a grand manner with camera angles carefully orchestrated to create whistle-worthy moments. He keeps his plots very simple, just like commercial films. Plot merely functions as a cloth that’s draped around his beautifully naked characters, almost like an afterthought. Vikram in Pithamagan and Arya in Naan Kadavul are classic masala hero template characters. Just like mass heroes nothing can shake them and they’ll go to any extent to have revenge upon the villain or kill the bad guys. They even assume mythic proportions as mentioned by Baradwaj Rangan in his review of Naan Kadavul. But, what fuels them is something different from a regular mass hero. Chithan’s strength is from the awareness that everyone ends up in the grave eventually. Rudran’s strength is from his transcendental spiritual enlightenment that he has no boundaries. The peculiar backgrounds of these characters make you believe that they possess superhuman strength. He makes you wish that the bad guys must be destroyed and that gives a satisfactory pay-off when they’re butchered in the climax.
While still being larger-than-life, Bala’s protagonists also break the stereotypes. They’re invariably misfits or outcasts. They’re shabby, rugged and don’t refrain from speaking coarse language. Rudran in Naan Kadavul doesn’t care about his weeping mother, which is usually a big no-no if you want to get female votes in a future election. Arya as Kumbindrensamy in Avan Ivan is the exact opposite, perhaps even a mockery, of the chocolate boy he’s played in other films. This celebration scene should give you a feel of his character.
Trivia: In an interview, Bala confessed that he realised much later after making Pithamagan that its plot closely resembled Ram Gopal Varma’s Satya - two characters meet in a prison, have an initial tiff, become friends, one of them is killed and the other takes revenge.
Ridiculing the absurdity of life
Bala’s films are usually classified as tragedies. But, it’d be more apt to classify them as “tragedy with a heavy dose of ridicule”. He makes us laugh at misery and wade through the absurdity of life with irreverence. That’s what the beggars in Naan Kadavul do. Making the beggars dress up as gods and rebuke each other was a riot. Even in Pithamagan when we laugh at Suriya’s antics in trying to sell all kinds of weird and wacky concoctions to unsuspecting customers, we’re laughing not at Suriya but at ourselves and our tendencies to be easily fooled. And in Avan Ivan, Walter Vanangamudi (Vishal) who calls himself an artist is taunted by his mother for being a hapless bumpkin who can’t steal to make a living. If you view Vishal’s character as representing a filmmaker who’s true to art and Arya’s character to be a commercial filmmaker who knows the tricks of the trade, then you’ll understand the depth of satire embedded in Avan Ivan’s narrative.
Trivia: When an interviewer asked Mani Ratnam why his films seem to portray only elite characters and not the underprivileged (kind of a dumb question), he retorted “Aren’t other directors like Bala doing that very well? Then why should I?” (The Mani Ratnam interview)
Embedded Narratives
Traditionally, realistic films have always been mere reflections of society or about specific human emotions. But, Bala’s films portray realism while at the same time transcending it and speaking of an eternal agony that tortures the human soul. Let’s take the final pan shot of the tea estate in Paradesi’s climax. Here’s a man who’s wailing for his family that’s joined him in his misery and the pan shot is literally showing you his wail travel across the entire tea estate dotted with other workers. If you pause for a moment and consider the tea estate to be a metaphor for the human world, then the narrative assumes a much larger philosophical dimension. Bala has been adept at tucking hidden dimensions beneath the rug of realism in every film. On the surface, Thaarai Thappattai is a love story gone horribly wrong but it’s also an exploration of how each generation thinks its subsequent generation is a degraded version of itself. In Nandha, while there’s the story of a man yearning for his mother’s love at the forefront, there’s a woman refugee in the background with no place to call home. And the best embedded narrative is in Naan Kadavul. It raises the bigger question of who’s the real beggar. The lyrics of Pitchai Paathiram that metaphorise the human body as a begging bowl make the bigger point that all humans are beggars seeking divine deliverance. And in that grand scheme of things, the distinctions of pure, impure, rich, poor, well-built and handicapped crumble. It’s exactly what Rudran says in Naan Kadavul when a fellow accuses him of tarnishing fire. “Is there clean and unclean fire? Fire is just fire.”
Bala also tends to embed a variety of inspirations into his narrative. His first film Sethu was inspired from a Malayalam short story ‘Iruttinte Atmavu’ by MT Vasudevan Nair, a Tamil poem by Arivumathi and a real-life experience. Naan Kadavul is loosely based on ‘Ezham Ulagam’, a novel by Jeyamohan that details the lives of Pandaram, his family and begging cohort. The first couple of chapters of this novel will shock you with the portrayal of the lives of these characters but as you read further you’re drawn into their world. Naan Kadavul’s screenplay has a similar structure. There’s the initial jolt you feel when the camera first moves into Thaandavan’s den but you gradually begin to love the characters and enjoy their little moments of joy. Jayankanthan’s short story ‘Nandhavanathil Or Aandi’ deals with how a grave digger is not moved by deaths but when his son dies at a very young age, he’s completely broken. He’s tormented by visions of all the dead children he has buried, rising up from the graves and dancing in front of him. To find out how Bala adapts this scenario without resorting to outlandish visuals, watch the film!
Trivia: Bala is a graduate in Tamil literature from Madurai American College.
In a way, Bala’s films are like Buddhist tales from the past. These stories were always about people who were disillusioned and after some suffering invariably they’d end up at the feet of Buddha, become a disciple, meditate and attain nirvana. One such tale is that of Kisa Gotami. The distraught lady who went to the Buddha, begging him to bring her dead son back to life. Buddha asks her to fetch mustard seeds from a family where nobody had died. She searches far and wide and finally realises there’s not a single house that hasn’t known death. She returns to the Buddha with this realisation, becomes his disciple and attains nirvana. Had this been a Bala film, the story would pretty much be the same. Except that Gotami would still be searching for those mustard seeds, hoping she can revive her son, roaming the earth in eternal agony. And you’d watch his film, not because you can shed tears for Gotami, but because Bala will make you feel Gotami and you are one and the same.
***
Links to watch Bala’s Movies
Sethu on Youtube
Nandha on Youtube
Pithamagan on Herotalkies
Naan Kadavul on Youtube | Naan Kadavul on Tentkotta
Avan Ivan on Tentkotta
Paradesi on Youtube
Thaarai Thappattai on Tentkotta
References
Bala’s Interview on Puthiya Thalaimurai, in which he mentions the gift from an aghori
Bala’s BOFTA masterclass, in which he shares several insights on his films
Ezham Ulagam, the novel by Jeyamohan on which Naan Kadavul is loosely based
Nandhavanathil Or Aandi, the short story by Jeyakanthan that inspired Pithamagan’s Chithan character
Baradwaj Rangan’s take on Naan Kadavul
Baradwaj Rangan’s review of Pithamagan
A few articles by Jeyamohan clarifying certain portions of Naan Kadavul
http://www.jeyamohan.in/1179
http://www.jeyamohan.in/1873
http://www.jeyamohan.in/1869
My heartfelt thanks to my friends N Balasubramanian, Venkataraman, Ganesh Babu and Ajay Vignesh for their inputs that greatly inspired me in writing this piece.
An edited version of this piece can be found here.
லிட்டில் இந்தியாவில் உள்ள எந்தெந்த உணவகங்களில் சிங்கப்பூர் தமிழர்கள் சாப்பிடுவார்கள், எங்கு இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் சாப்பிடுவார்கள் என்று ஆழமாக விவாதித்தப்படி நானும் பாலாவும் செராங்கூன் வீதியில் நடந்து சென்றோம். கோமள விலாஸ் கூட்டமாக இருந்தது. மெட்ராஸ் ஊட்லெண்ட்ஸ்ஸில் கை நனைத்துவிட்டு, லிட்டில் இந்தியா ஆர்கேட் நோக்கி நடந்தோம். நண்பர் கணேஷ் ஜி.ஜி.எஸ் புத்தக கடைக்கு தெளிவாக வழிக்காட்டியிருந்தார். “லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் பனானா லீஃப் உணவகம் இருக்கும். அதற்கு பக்கத்தில் ஒரு அலுவலக கதவு. அக்கதவை திறந்தால், ஒரு மின்தூக்கி வரும். அதில் இரண்டாம் மாடிக்கு சென்று புத்தக கடை என்று கேளுங்கள்.”
மின்தூக்கியில் செல்வதற்கு பதிலாக அலுவலக கதவை திறந்து படிக்கட்டுகளில் ஏறும்போது பாலா சொன்னார், “புத்தக கடைன்னா இப்படிவொரு லொகேஷன்ல தாங்க இருக்கணும். ஏதோ கஞ்சா வாங்க போற மாதிரியே போறோம்.” அப்படி இருந்தது படிக்கட்டு. மேலே சென்றால், மங்கிய வெளிச்சத்தில் ஒரே மாதிரி பல கதவுகள். ஒரு திறந்த கதவு வழியாக எட்டிப்பார்த்த போது, “எம்பிளாய்மென்ட் ஏஜென்சி” என்ற விளம்பரப்பலகைக்கு பின்னாலிருந்து கண்ணாடி அணிந்த இந்திய அங்கிள் என்னை முறைத்தார். நான் உடனே திரும்பிவிட்டேன். தொள தொள சட்டை பேண்ட் அணிந்த இன்னொரு அங்கிள் தள்ளுந்தில் எதையோ நகர்த்தி கொண்டிருந்தார். அவரிடம், “புக் ஷாப்?” என்று கேட்டவுடன், “வாங்க வாங்க இது தான்” என்று செவுத்தோரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 அட்டைப்பெட்டி டப்பாக்களை காண்பித்தார்.
ஒவ்வொரு டப்பாவும் இடுப்பு உயரம் இருக்கும். உள்ளே எத்தனை புத்தகங்கள் என்ற எண்ணிக்கை அதன் மீது எழுதப்பட்டிருந்தது. பாலா உடனே ஒரு வியூகம் சொன்னார். “ஒவ்வொண்ணா திறந்து முதல்ல புத்தகங்கள ஷார்ட்லிஸ்ட் பண்ணுவோம். அப்புறம் அதுலேர்ந்து எது வாங்கலாம்னு பார்க்கலாம்.” கடைக்காரர் இருவருக்கும் அமர நாற்காலி தந்தார். தள்ளுந்தில் ஒரு பெரிய அட்டை பெட்டியில் மேலும் சில புத்தகங்களை கொட்டிக்கொண்டிருந்தார். “இதெல்லாம் காயிலாங்கடைக்கு தான் போகுது. இதுல எதுவும் உங்களுக்கு உதவியா இருக்காது.” என்று வேறொரு ஓரமாக வைத்திருந்த 4 பெட்டிகளை சுட்டிக்காட்டினார்.
முதல் பெட்டிக்குள் கைவிட்டு ஐந்தாறு புத்தகங்களை அள்ளினோம். ஒவ்வொன்றாக பார்த்தோம். சிலவற்றை தலைப்பு பார்த்துவிட்டு தள்ளி வைத்தோம். சிலவற்றை அட்டையில் இருக்கும் படத்தை பார்த்தே நிராகரித்தோம். சற்று ஆர்வம் தூண்டியவற்றை புரட்டி பார்த்தோம். சில புத்தகங்கள் தலை கீழாக இருந்தாலும் அவற்றை பார்த்தாலே “ரிஜெக்டெட்” என்று தோன்றியது. சில புத்தங்கங்களை டப்பாவிலிருந்து வெளியே எடுக்க்காமலே விட்டுவிட்டோம். ஒரு ஓரமாக ஷார்ட்லிஸ்ட் செய்த புத்தகங்களை அடுக்கினோம். ஒரு அட்டைப்பெட்டியில் கிட்டத்தட்ட 140 புத்தகங்கள். அதில் நாங்கோ ஐந்தோதான் ஷார்ட்லிஸ்டுக்கு தேறியது. மெதுவாக ஷார்ட்லிஸ்ட் அடுக்கு வளர்ந்தது. பாலாவின் நெற்றியிலிருந்து வேர்வை வழியத்துடங்கியது.
“திருச்சியில நான் புத்தகம் வாங்குற இடம் இப்படிதாங்க இருக்கும். வெளிச்சம் கெடையாது, விசிறி கூட கிடையாது. வேர்க்க விறுவிறுக்க தான் புத்தகம் தேடணும்.” சென்னையில் லேண்ட்மார்க்கில் நுழைவு வாயிலில் என்னை சல்யூட் அடித்து வரவேர்த்த பாதுகாவலரையும் குளுமையான ஏ.ஸி காற்றையும் நினைத்து பார்த்தேன்.
கடை உரிமையாளர் சில புத்தகங்களை அடுக்குவதற்கு வெளியே வந்தபோது பேச்சு கொடுத்தார். “இனிமே ஸ்கூல் புத்தகங்கள் தான் விக்க போறேன். கீழ இருக்கற இடம் காலி செஞ்சுட்டு இங்க மேல மட்டும் ஒரு டிஸ்பிளே வெக்க போறேன். ஆன்லைன்ல ஆர்டர் செய்யுற மாதிரி செட் பண்ண போறேன்.”
“முன்னவிட இப்போ புத்தகம் வாங்குறது குறைஞ்சிடுச்சா?”
“கண்டிப்பா. தொண்ணூறுல நல்ல சேல்ஸ் நடக்கும். ஒரு வருஷத்துக்கு half a million turnover இருக்கும்! 23 வருஷமா இந்த வியாபாரம் பண்றேன். இப்போ ரொம்ப கொறஞ்சு போச்சு. இதுக்கு முன்னாடி என் கடைக்கு வந்திருக்கீங்களா?”
“இல்லீங்க. இங்க புத்தக கடை இருக்குன்னே பாரதி சொல்லிதான் எங்களுக்கு தெரியும்.”
“என் கடையை தெரியாம இவ்வளோ நாள் சிங்கபூருலே நீ எப்படி இருந்த?” என்பது போல என்னை பார்த்தார். நானும் லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் காராசேவ் வாங்கியிருக்கிறோம் ஆனால் புத்தகம் வாங்கவில்லையே என்ற குற்றவுணர்ச்சியில், திரும்ப புத்தகங்களை அள்ளுவதில் மும்முரமானேன். பிறகு அவர் கடைக்கு வரும் நபர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இவர் வருவார், அவர் வருவார் என்று சிலபல பெயர்களை சொன்னார். அந்த பெயர்கள் எல்லாம் வாட்ஸாப்பில் பகிரப்படும் வண்ணவண்ண இலக்கிய அழைப்பிதழ்களில் பார்த்த ஞாபகம்.
“ஓஹோ” என்பதை தவிர எங்களிடமிருந்து வேறு ரியாக்ஷன் வரவில்லை. பிறகு நேரடியாக, “நீங்க இரெண்டு பேரும் எந்த க்ரூப்பு?” என்று கேட்டார். நானும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, “எந்த க்ரூப்பும் இல்ல” என்றோம். சாதியை மறைமுகமாக கேட்பவர்களை போல, பல பெயர்களை ஆரம்பத்தில் சொல்லி எந்த க்ரூப்பென்று துப்பறிய முனைந்தது தோற்றபின், நேரடியாக கேட்டிருக்கிறார் என புரிந்தது.
“நீங்க எந்த வட்டம்?” என்று நான் கேட்டேன்.
“நான் எல்லாத்தையும் தள்ளி நின்னு பாக்குறவன்” என்றார்.
“இவர் சூப்பரா கவிதை எழுதுவார்!” என்று பாலாவை சுட்டிக்காட்டினேன். “இவர் கதை எழுதுவார்” என்றார் அவர்.
ஏன் என்று தெரியவில்லை திடீரென்று என்னை பார்த்து, “உங்களுக்கு பிடிச்ச நாவல் எது?” என்று கேட்டார். புத்தகக்கடை உரிமையாளரிடம் பொய் சொல்வதா என்ற எண்ணத்தில், “இன்னும் நான் தமிழ்ல நாவல் எதுவும் படிச்சதில்ல” என்றேன். மீண்டும் அதே அதிருப்தியான முகபாவத்துடன் என்னை பார்த்தார்.
அவரை சாந்தப்படுத்த “சிறுகதை படிப்பேன். அசோகமித்திரன் சுஜாதா இரெண்டு பேரும் பிடிக்கும்.”
“சுஜாதா எனக்கு சுத்தமா பிடிக்காது!” என்று அறிவித்தார், “நீங்க லட்சுமி ஓட எழுத்து படிங்க. ரொம்ப நல்லா இருக்கும். யண்டமூரி விரேந்திரநாத்னு இன்னொருத்தர். அவரோட கதைகள் மொழிபெயர்ப்புல படிச்சிருக்கேன். ஒவ்வொருகதையும் அருமையா இருக்கும்.”
“எந்த மொழில எழுதுவார் அவர்? மலையாளமா?”
“இல்ல. அது சரியா நினைவில்ல. ஆனா அவர் கதைகள் எடுத்தா கீழ வெக்கமுடியாது. நீங்க சிவசங்கரி படிப்பீங்களா? நான் படிக்கமாட்டேன். அந்தம்மா எப்பவும் ஆண்களை குறைசொல்லியே எழுதுவாங்க. எது நடந்தாலும் அதுக்கு ஆண்கள் தான் காரணம். சரி நீங்க புத்தகங்கள் பாத்துட்டு இருங்க. நான் போயிட்டு வந்துடறேன்” என்று சட்டைப்பையில் தொங்கும் கைபேசியை வெளியே எடுத்து தட்டிக்கொண்டே கிளம்பினார்.
பாலா உடனே, “புத்தககடை வெச்சிருக்கறவங்களுக்கு இப்படி குறிப்பிட்ட எழுத்தாளரை பத்தி மதிப்பீடு இருக்க கூடாதுங்க. அப்புறம் பிடிக்காத எழுத்தாளரோட புத்தகங்களை வாங்கிவெக்க மாட்டாங்க இல்லாட்டி வேண்டாவெறுப்போட தான் வாங்குவாங்க.”
“சரி தான். யாருங்க அது லட்சுமி?”
“தெர்லயே. ஒவ்வொரு டப்பாலேர்ந்தும் மூணோ நாலு புத்தகம் தான் தேறுது. ம்ம்...”
“நமக்கு முன்னாடி கணேஷ் பாபு வந்துட்டு போயிருக்காருல. அதான். இருங்க நான் அந்த காயிலாங்கடைக்கு போற டப்பாக்களை பாக்கறேன். அதுல ஏதாச்சும் தேறும்னு தோணுது.”
“ஆமாங்க... அவரு பேசினதுபார்த்தா அந்த டப்பாலதான் நல்ல புத்தகம் இருக்கும்னு தோணுது.”
ஆனால் காயிலாங்கடைக்கு செல்லும் டப்பாவை சற்று நோண்டி பார்த்ததில் தொழிலில் செழிப்பது பற்றியும், ஆன்மீகம், குழந்தைகள் நூல்கள் தான் இருந்தன. திரும்ப வந்து எனது ஸ்டூலில் அமர்ந்து புத்தகங்களை பொறுக்க ஆரம்பித்தேன்.
“இந்த கடை மூடாம இருந்திருந்தா, இந்த புத்தகங்களெல்லாம் நாம ஏறெடுத்துகூட பாத்திருப்போமா பாலா? சில சமயம் சில கடைகள் மூடுறது நல்லது தான்.”
“ஆமாங்க. நாம இப்போ செய்யுறது ஒவ்வொரு எழுத்தாளரும் செய்யவேண்டிய வேலை. அப்போ தான் எத்தனை புத்தகங்கள் வேஸ்ட்டா டப்பாக்குள்ள கெடக்குனு புரியும். இன்னொரு புத்தகம் அச்சிடறதுக்கு முன்னாடி கொஞ்சமாச்சும் யோசிப்போம் பாருங்க.”
“யாருங்க இந்த அ.மார்க்ஸ்? அவரு புத்தகம் தான் ஜாஸ்தியா கையில வருது. இவ்வளோ புத்தகம் இருக்குன்னா, ஒன்னு அவரு ரொம்ப பிரபலமா இருக்கணும் இல்லாட்டி அவர் புத்தகத்தை யாரும் வாங்காம இருக்கணும்.”
“அவர் ஒரு பேராசிரியருங்க. அட! இங்க பாருங்க பொக்கிஷம்!” என்று ஒரு புத்தகத்தை தூக்கி காண்பித்தார் பாலா. ஒரு பிரபல சிங்கப்பூர் எழுத்தாளர். தமிழர் மரபு கருதி அது யாரென்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஷார்ட்லிஸ்ட் பட்டியலில் அதை சேர்த்தோம், ஆனால் எனக்கும் பாலாவுக்கும் தெரியும், அதை வாங்கமாட்டோம் என்று.
பல மொழிபெயர்ப்பு நூல்கள் கையில் அகப்பட்டன. “ஓ! பாஸ்கர் சக்தி Roald Dahl கதைகளை மொழிபெயர்த்திருக்காருங்க. மாலன் கிட்ட நான் கேட்டேன் பாலா, ஐசாக் அசிமோவ் கதைகளை யாராச்சும் மொழிபெயர்த்திருக்காங்களான்னு. ஆனா அவர் நீங்க சொந்தமா எழுதுங்க, மொழிபெயர்ப்புல நேரம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டார்.”
சிறிது நேரத்துலயே ஐசாக் அசிமோவின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று கையில் சிக்கியது ஆச்சரியமாக இருந்தது. “பாருங்களேன் ஒருத்தர் ஆல்ரெடி செஞ்சிருக்கார்.” ஷார்லிஸ்ட்டில் வைத்தேன். சத்யஜித் ரேவின் பெலுடா கதைகள் மற்றும் அகன்டுக் திரைப்பட திரைக்கதையின் தமிழ் மொழியாக்கம் சிக்கியது. பழைய தமிழ் நடிகர் ராஜேஷ் உலக சினிமா பற்றி எழுதிய பல நூல்களும் இருந்தன.
சென்னையில் என் அம்மாவின் அலுவலகத்தில் ஏ.செல்வமணி என்றொருவர் இருக்கிறார். சாதுவான, மென்மையான மனிதர். எப்போதுமே அவரை நான் சீருடையில் தான் பார்த்திருக்கிறேன். பல இந்திய தலைவர்களை பற்றி விவரங்கள் சேகரித்து புத்தங்கள் வெளியிடுவார். “பாரதம் கண்ட பாரத ரத்னாக்கள்” என்றொரு நூலை அவரை சந்த்தித்த போது எனக்கு தந்திருந்தார். பாரத் ரத்னா வென்ற இந்தியர்களின் வாழக்கையை பற்றிய தகவல் சேகரிப்பு. “இதெல்லாம் விக்கிபீடியாலயே இருக்குமே அங்கிள்?” என்று எனக்கு சொல்ல தைரியம் வந்ததில்லை. ஏதோ அவரின் வேலைகளுக்கு நடுவே இப்படி சிறுசிறு தகவல்களை சேர்த்து அடுத்த தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறார். அவரின் நூல்களும் ஒன்றிரண்டு கையில் சிக்கின. “பரவாயில்லையே சிங்கப்பூர் வரைக்கும் வந்திருக்கே” என்று மனதில் சந்தோஷப்பட்டுக்கொண்டு பாலாவுக்கும் காண்பித்தேன்.
அடுத்து அட்டையில் விண்கப்பலின் படத்தைக்கொண்ட ஒரு விஞ்ஞான சிறுகதைகள் நூல் பார்த்ததும், பாலாவிடம் காண்பித்தேன், “பாலா இது நல்லா இருக்கும்னு நினைக்கறீங்களா?” அவர் தலைப்பை படித்தார். “‘புதுமையான விஞ்ஞான கதைகள்’. அது என்ன ‘புதுமையான’? கண்டிப்பா நல்லா இருக்காது. வெச்சிருங்க. தலைப்புலயே ‘புதுமையான’ன்னு போட வேண்டியது. ஓ! இவரோட புத்தகம் இருக்கா?” என்னிடம் ஒரு புத்தகத்தை காண்பித்தார் பாலா, “இவரை பத்தி ஜெயமோகன் நிறையா சொல்லிருக்காருங்க.” ஷார்லிஸ்ட் பட்டியலுக்கு அந்த நூல் சென்றது.
அப்புறம் திடீரென்று எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒரு தடித்த புத்தகத்தை கடை உரிமையாளர் தந்தார். “பாரதிதாசன் கவிதைகள். என்னோட புத்தகம். இந்த தொகுப்பு இப்போ எங்கயும் கெடைக்கறதில்லை.” திரும்ப “ஓஹோ” என்றுவிட்டு மரியாதைக்காக புத்தகத்தை புரட்டிவிட்டு ஓரமாக வைத்தோம். “இது வேணுமா பாருங்க” என்று கண்ணதாசனின் பாடல் வரிகள் நூலை கடைக்காரர் நீட்டினார். வேண்டாமென்று நானும் பாலாவும் பணிவாக சிரித்தோம்.
அதிகமாக கேள்வி பதில் நூல்கள், ஏதாவதொரு சாமியாரின் அறிவுரைகள், கம்யூனிச சித்தாந்த உரைகள் என்று தான் வந்துக்கொண்டே இருந்தது. பள்ளி வாழ்க்கை நினைவுக்கு வந்தது. கேள்வி பதில் நூல்களை வெறித்தனமாக வாங்குவேன். பல வினாடி வினா போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. கூகிள் பிரபலமான பிறகு ஏனோ வினாடிவினா போர் அடித்து போனது. அந்த நூல்களின் ஈர்ப்பும் குறைந்து போனது. பத்தே வருடங்களில் இவ்வளவு மாற்றம்.
இன்னும் சிலர் வந்தார்கள். கழுத்தை சுற்றி காதணிகள் தொங்க ஒரு நடுத்தர வயதவரும், இரு தம்பதியினரும். ஒரு தம்பதி தள்ளுவண்டியில் குழந்தை வைத்திருந்தார்கள். நானும் பாலாவும் பார்த்து முடித்த பெட்டிகளை அவர்கள் திறந்து நோண்ட துவங்கினார்கள். காதணிகள் வைத்திருந்தவர் ஐந்து நிமிடம் நோண்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். பெட்டிக்குள் ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையின் தோளை தட்டிய தந்தை, கலைஞரின் படம் போட்ட புத்தகத்தை நீட்டி, “உங்க அம்மாக்கிட்ட கொடு” என்றார்.
ஒரு வழியாக பத்து பெட்டிகளையும் முடித்துவிட்டு ஷார்ட்லிஸ்ட் பட்டியலை அலச ஆரம்பித்தோம். அதிலிருந்த பல புத்தகங்களை தள்ளிவைத்தோம். கடைசியில் என்னிடம் ஐந்து மிஞ்சியது. பாலாவிடம் ஒரு குவியலே இருந்தது. “பெரும்பாலும் கவிதை தொகுப்புகள் தாங்க” என்றார். இருவரும் எழுந்து கைகளை தட்டிக்கொண்டோம். பல புத்தகங்களை புரட்டியதில் இரு கைகளிலும் கருப்பாக அழுக்கு. புத்தகங்களை எடுத்துக்கொண்டு கடைக்காரரின் அறைக்குள் சென்றோம். அவர் பல வேலைகள் இருக்கின்றன என்பது போல பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்தார். “பல வருஷங்களா சேர்த்த புத்தகங்க பாருங்க. இதெல்லாம் க்ளியர் பண்றதே பெரிய வேலை. இன்னிக்கு உதவிக்கு சில பேர் வரேன்னு சொல்லிருந்தாங்க ஆனா இன்னும் வரக்காணோம். மொத்தம் எவ்வளோ புத்தகம் எடுத்திருக்கீங்க? நீங்களே எண்ணி சொல்லிடுங்க” ஒரு புத்தகத்துக்கு 2 வெள்ளி. நான் 10 வெள்ளியும் பாலா 46 வெள்ளியும் கொடுத்துவிட்டு விடைப்பெறுகையில், “இருங்க. இந்தாங்க இதுவும் ஆளுக்கு ஒன்னு எடுத்துக்கோங்க.” என்று ஏதோவொரு புத்தகத்தை கையில் திணித்தார். என்னெவென்று பார்த்தால் திருக்குறள். புத்தக கடை உரிமையாளர் தரும் புத்தகத்தை நிராகரிக்கக்கூடாது என்று வாங்கிக்கொண்டோம். “பை ராம்” கைகுலுக்கிவிட்டு பாலா கிளம்பினார்.
எனக்கு லேசாக பசித்தது. கையை சோப்புப்போட்டு கழுவிவிட்டு பக்கத்தில் இருக்கும் ஆனந்த பவனுக்கு சென்றேன். பஜ்ஜி கண்ணை ஈர்த்தது. “இரெண்டு வாழைக்காய் பஜ்ஜி” என்று கேட்டேன். “மூனாத்தான் வரும்” என்றுவிட்டு என்னையே வெறித்துப்பார்த்தார் கவுண்ட்டர் பெண்மணி.
“சரி மூணு குடுங்க. அப்படியே பொடி இட்லி டேக் அவே.”
“6 வெள்ளி”
ஒரு புத்தக பையும், ஒரு அனந்த பவன் டேக் அவே பையும் பிடித்துக்கொண்டு சாலையை கடந்தேன். கைபேசியை எடுத்து கணேஷ் வாட்ஸாப்பில் பகிர்ந்திருந்த “ஓமல்லாஸ்ஸை விட்டு வெளியேறி செல்பவர்கள்” சிறுகதையை படிக்க துவங்கினேன்.
அ.கி.வரதராஜன் ஐயாவின் வகுப்பில், தாடகை வதை படலம் கற்றபின், வால்மீகி இதே சழக்கியின் வதத்தை எவ்வாறு எழுதியிருப்பார் என்ற கேள்வி தோன்றியது.
வால்மீகி ராமாயணத்தில் தாடகையை வதம் செய்ய வேண்டும் என அவளைச் சந்திக்கும் முன்னரே விசுவாமித்திரர் ராமனிடம் சொல்லி விடுகிறார்.
स्व बाहु बलम् आश्रित्य जहि इमाम् दुष्ट चारिणीम् || १-२४-३०
मत् नियोगात् इमम् देशम् कुरु निष्कण्टकम् पुनः |
Depending upon the strength of your own self-confidence you have to eradicate this evildoer, and assigned by me you have to make this province free from thorniness
அது மட்டுமில்லாமல், இதுவரை பெண்களை கொன்ற மகாபுருஷர்களின் உதாரணங்களையும் தருகிறார். இந்திரன் மந்தாரையைக் கொன்றது, விஷ்ணு பிருகு மற்றும் சுக்ராச்சாரியாரின் மனைவியைக் கொன்றது என உதாரணங்கள் கொடுத்து, தீங்கு செய்யும் பெண்களைக் கொன்றிருக்கிறார்கள் என எடுத்துச் சொல்கிறார்.
श्रूयते हि पुरा शक्रो विरोचन सुताम् नृप |
पृथिवीम् हन्तुम् इच्छन्तीम् मन्थराम् अभ्यसूदयत् || १-२५-२०
Oh, Rama, the protector of people, we have heard that Indra once eliminated Manthara, the daughter of Virochana, when she wished to annihilate earth, haven't we.
विष्णुना च पुरा राम भृगु पत्नी पतिव्रता |
अनिन्द्रम् लोकम् इच्छन्ती काव्यमाता निषूदिता || १-२५-२१
And Rama, once Vishnu wiped out even the wife of sage Bhrigu and sage Shukracarya's mother when she wished the world to become one without a governing factor, namely Indra.
வால்மீகியின் தாடகையிடம் மாய சக்திகள் உள்ளன. அதை வைத்து தூசிப்புயலை கிளப்புகிறாள். கற்களின் மழையைச் செலுத்துகிறாள். ராமன் அவளின் இரு கைகளையும் அம்பால் கொய்கிறான். அவள் பெண் என்பதால் முடிந்தளவு கொல்லாமலிருக்க முனைகிறான். இலக்குவன் அவளின் காதுகளையும் மூக்கையும் அறுக்கிறான். (இலக்குவனுக்கு மூக்கை வெட்டுவதில் அப்படி என்னவொரு ஆனந்தம் எனப் புரியவில்லை!) பிறகு தாடகை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து அவர்களைத் தாக்குகிறாள். விசுவாமித்திரர் பொறுமையிழந்து “போதும் ராமா! பெண் எனப் பார்க்காதே. அவள் கொடியவள். யாகங்களுக்கு இடையூறு செய்பவள். இருட்டுவதற்கு முன் அவளைக் கொல்ல வேண்டும். கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். இருட்டியபின் அரக்கர்களை வீழ்த்த முடியாது.” இவ்வாறு இரண்டாவது முறை விசுவாமித்திரர் சொன்ன பிறகு தான் ராமன் அம்பு எய்து தாடகையை கொல்கிறான். அவனின் அம்பு இடியின் வேகத்தில் அவளைத் தாக்குகிறது. தாடகை வீழ்கிறாள். இந்திரன் உட்பட வானுலகத்தார் ராமனைப் பாராட்டுகின்றனர். விசுவாமித்திரர் ராமனின் நெற்றியில் முத்தமிடுகிறார்.
இதே தாடகை வதத்தை கம்பன் அணுகும் முறையில் 4 முக்கிய வித்தியாசங்கள்.
கம்பரின் விசுவாமித்திரர் தாடகையை கொல் என ஒரு முறை மட்டுமே சொல்கிறார். இரண்டு முறை அல்ல. விசுவாமித்திரரின் பேச்சுக்கு மறுபேச்சில்லை என்பது போல ஒரு முறை அவர் சொன்னதும், அறமாக இல்லாவிடிலும் நான் வேதமாக எடுத்துக்கொண்டு செய்வேன் என ராமன் அம்பு எய்கிறான். வால்மீகி ராமன் போல அவளைக் கொல்லென்று சொன்ன பின்பும் கை கால்களை வெட்டி நேர விரயம் செய்யவில்லை.
கம்பரின் தாடகை எல்லா உயிரினங்களையும் உட்கொள்ள வேண்டும் என்ற வெறியுடையவள் மட்டுமே. அவளிடம் மாய சக்திகள் ஏதுமில்லை. அவள் மறைந்து தாக்கி ராமனுக்கு வித்தைகள் எதுவும் காட்டவில்லை. கம்பரின் ராமன் சுலபமாக அவளைக் கொன்றுவிடுகிறான். அம்பு எய்ததையும் யாரும் பார்க்கவில்லை, வில்லை வளைத்ததையும் யாரும் பார்க்கவில்லை, அவளின் சூலம் மட்டும் உதிர்ந்து கிடந்ததை பார்த்தனர். இது ராமனின் வலிமையை மேலும் உயர்த்துகிறது. தாடகை ராமனின் ஒரு முடியைக்கூட அசைக்கவில்லை என்பது போல.
கம்பர் பெண்களை கொன்ற மாமனிதர்களைப் பட்டியலிடவில்லை. தாடகை பெண்ணே அல்ல என்றே வாதிடுகிறார். வால்மீகியைப் பொறுத்தவரை தவறு செய்தது யாராக இருந்தாலும், பெண்ணோ ஆணோ, அவரைக் கொல்லலாம். கம்பரைப் பொறுத்தவரை “எண் உருத் தெரிவு அரும்” பாவத்தை செய்பவள் பெண்ணே அல்ல. “பெண்ணை கொல்” என கம்பர் சொல்லவில்லை. இதைக் கலாச்சார வேறுபாடாகக் கூட பார்க்கலாம்.
கம்பர் தாடகை வதத்தில் இலக்குவனுக்கு வேலையே தரவில்லை. படையப்பா படத்தில் அப்பாஸ் போல வேடிக்கை மட்டும் பார்க்கிறான். இது நல்ல விஷயம் தான். தாடகை வதத்தின் முழு கவனம் ராமன் மீதே குவிகிறது. “சைட் கேரக்டராக மூக்கையும் காதையும் வெட்டுவதற்குப் பதிலாக, நீ சும்மாவே இரு!” என்று கம்பன் இலக்குவனிடம் சொல்லியிருக்கலாம்.
கம்பனை உவமைகளின் சரணாலயமாகவே பார்க்கிறேன். இடியின் வேகத்தில் ராமனின் அம்பு சென்றது என வால்மீகி சொன்னால், அதையும் தாண்டி சென்று, கொடிய மூடன் காதில் விழுந்த நல்லோர் சொல்லின் பொருள் போல அம்பு போயிற்று எனச் சொல்கிறார். சிறிது நேரத்தில் இருட்டி விடும் என வால்மீகியின் விசுவாமித்திரர் சொல்கிறார். ஆகவே தாடகை வதம் அந்தி மாலை நேரத்தில் நடக்கிறது. இருட்டியதும் கொல்லமுடியாது என்றெல்லாம் கம்பன் சொல்லாமல், அந்தி மாலையைக் அழகியதோர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். அந்திமாலையின் சிவந்த வானம் ஒடிந்து தரையில் விழுந்தது போல இருந்தது, ரத்தம் ஒழுகி தாடகை கிடந்த காட்சி என ஒரு போடு போடுகிறார்.
பாடல் 391
கான் திரிந்து ஆழி ஆகத்
தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு
ஒழுகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம்
ஆயினது - அந்த மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு
அற்று வீழ்ந்தது ஒத்தே!
வால்மீகி பயன்படுத்திய இடியையும் ஓர் இடத்தில் கம்பன் கொண்டுவருகிறார். ஆனால் ராமனின் அம்பிற்கு அந்த உவமையைப் பயன்படுத்தாமல், தாடகை வீழ்ந்ததற்குப் பயன்படுத்துகிறார்.
பாடல் 389
பொன் நெடுங் குன்றம் அன்னான். புகர்
முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று
அடித்தலும். - இடித்து. வானில்
கல் நெடு மாரி பெய்யக்
கடையுகத்து எழுந்த மேகம்.
மின்னொடும் அசனியோடும்
வீழ்வதே போல - வீழ்ந்தாள்.
தாடகையின் அழிவையும் கம்பர் சும்மா விட்டுவிடவில்லை. ராவணன் மரணத்திற்கு அறிகுறியாக வைத்திருக்கிறார். இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள்.
முந்தி உற்பாதம் ஆக.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது, தேவையில்லாத இடங்களை வெட்டியும், முக்கியமான இடங்களை விரித்துச் சொல்லியும், கம்பர் வால்மீகியின் ராமாயணத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்ல நினைத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே விரிந்திருக்கும் ராமாயண காப்பியத்தில் எங்கெல்லாம் புகமுடியுமோ அங்கெல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார். கம்பர் கையில் வால்மீகி ராமாயணம் ஒரு வரைபடம் போல. அந்த வரைபடத்தில் உள்ள எல்லா பாதைகளையும், நுணுக்குகளையும் தொட்டுவிடவேண்டும் என்ற வேட்கையோடு எழுதியதாகத் தோன்றுகிறது.
“கம்பனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காரணமிருக்கும். ஏன் இந்த வார்த்தை, ஏன் வேறொரு வார்த்தை இல்லை, எனக் கேள்விகள் எழுப்பினால், கம்பனை மேலும் ரசிக்கலாம்!” வரதராஜன் அய்யா அடிக்கடி சொல்வது இது. அது போல கம்பனின் ஒவ்வொரு விளியும் ஏன் பயன்படுத்துகிறார் என்ற கேள்வி எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு விளி வருவதற்கு ஆழமான காரணம் இருக்குமோ என யோசிக்கத் தூண்டுகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
“கரிய செம்மல்”
ராவணனும் பல அசுரர்களும் பிற்பாடு சாகப் போகிறார்கள் என்ற முன்னறிவிப்பைப் பார்த்தோம். இது பின்னறிவிப்பு. கையடை படலத்தில் பாடல் 324ல் “நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று விசுவாமித்திரர் தசரதனை கேட்கிறார். அவர் கேட்ட காரியம் நிறைவேறிய இடத்தில் கம்பர் ராமனைக் கரிய செம்மல் என்றழைக்கிறார். ஆக கையடை படலத்தில் ராமன் முனிவரோடு செல்லும் போது அவன் கரிய செம்மல் அல்ல. தாடகையை வதம் செய்த பிறகு தான் ராமன் கரிய செம்மல் ஆகிறான் என்று கம்பர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
“காகுத்தன்”
இந்திரன் காளையாகிச் சுமக்க - அரக்கர்களை வென்று இந்திரனுடைய ஆட்சியை மீட்டுக் கொடுத்த சூரியகுலத்து மன்னன் தான் காகுத்தன் (மறுபெயர் புரஞ்சயன்). காகுத்தனின் வம்சாவளியில் வந்ததால் ராமனை “காகுத்தன்” என அழைக்கிறார் கம்பர் என்று வெறுமனே சொல்லலாம். காகுத்தன் அசுரர்களைக் கொன்ற அரசன். ராமனும் தற்போது கன்னிப் போரில் ஒரு அரக்கியைக் கொன்றதால், அத்தருணத்தில் காகுத்தனுக்கு இணையாவதினால் தான் அங்கு “காகுத்தன்” என அழைக்கப்பட்டானோ?
“கங்கை தீம்புனல் நாடன்”
இதுவும் இன்னொரு அழகிய விளி. மேலோட்டமாகப் பார்த்தால், “இனிய நீர் கொண்ட கங்கை ஓடும் கோசல நாட்டிலிருந்து வந்தவனே” என்பது தான் பொருள். எதற்காக இந்த இடத்தில் கங்கையை குறிப்பிடவேண்டும். இந்த வரி இடம் பெரும் பாடலைப் பார்ப்போம்.
பாடல் 384
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை. அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.
எங்கும் தீ! தாடகையின் கண்களில் தீ. அவளே தீயின் உருவம். அவள் வீசும் அஸ்திரத்தில் தீ. ஆனால் எந்த தீயும் ராமனை ஒன்றும் செய்யாது என்பது அவனைச் சுட்டும் விளியிலேயே தெளிவாகி விடுகிறது. அவன் கங்கை தீம்புனல் நாடன். தாடகை ஏவிய தீ அவனுள் நுழைந்தாலும் அவிந்துவிடும் என்பதைக் கம்பர் மறைமுகமாகச் சொல்கிறார்.
ராமனின் தோள்களை பார்த்தால் ஆண்களுக்கும் பெண்ணாக பிறக்க வேண்டும் என்று தோன்றுமாம். யோசித்துப் பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தாலும், இந்த விளி ஏன் இந்த இடத்தில் தேவை? தாடகையை வர்ணித்துக் கொண்டிருக்கும் முனிவர் எதற்கு திடீரென்று ராமனின் தோள்களை பற்றிப் பேச வேண்டும்?
இதன் பதில் முந்தைய பாடலில் இருக்கிறது. “பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்”. பாவங்கள் எல்லாம் பெண் உருவம் கொண்டு திரிபவள் தாடகை. ஆண்களெல்லாம் பார்த்தவுடன் பெண்ணாக மாறவேண்டும் என்ற உருவம் கொண்டவன் ராமன். இவ்விருவரும் எதிர்மறைகள். பெண்களும் சரி ஆண்களும் சரி ராமனைக் கண்டால் அவனின் அழகில் மயங்கி அவனைச் சேர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு எதிர் மாறாகத் தாடகையோ காண்பதெல்லாம் அவளை வந்துசேர வேண்டும் என்று நினைக்கிறாள். “நாற்றம் கேட்டதும் தின்ன நயக்கிறாள்”. இந்த வித்தியாசமே அவளை “சழக்கி” யாகவும் ராமனை “கரிய செம்மல்” ஆகவும் ஆக்குகிறது.
“மைந்த”
பாடல் 365
‘முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்’ என்றான்
இந்தப் பாடலில் முனிவர் ராமனை “மைந்த” என்றழைப்பதில் பெரிதாக ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். இத்தருணத்தில் எதற்காக “தயரதனின் மைந்தனே” என்றழைக்க வேண்டும்? இதற்கு நாம் அரசியற் படலத்தில் பாடல் 177 பார்ப்போம்.
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.
உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தனது உடலுள் வைத்துக் காக்கும் அரசன் தயரதன் எனத் தெளிவாக கம்பர் நிறுவுகிறார். “அப்படிப்பட்ட தயரதனின் மகனே! இந்த அரக்கி எல்லா உயிர்களையும் தனது உணவெனக் கருதுகிறாள்” என்று விசுவாமித்திரர் சொல்கிறார். “அவளைக் கொல்” என்ற செய்தி இந்த வரியில்தான் மறைமுகமாக இருப்பதாக நினைக்கிறேன். முனிவர் இவ்வாறு சொன்னதை வைத்துத் தான் ராமனுக்கு “முனிவற்கு அது கருத்து எனினும்” என்று தோன்றுகிறது. ஒரேயொரு வார்த்தை, “மைந்த” என்ற விளி, அதை வைத்து தாடகையை என்ன செய்ய வேண்டும் என்பது ராமனுக்குப் புரிந்துவிடுகிறது.
ஜெயமோகன் பேரிலக்கியங்கள் ஒரு விதை போல என்று குறிப்பிட்டார். ஒரு கலாச்சாரமோ சமுதாயமோ முற்றிலுமாக அழிந்துபோனாலும் கூட, அதன் பேரிலக்கியம் எஞ்சினால், அவ்விதையிலிருந்து அச்சமூகத்தை முழுவதுமாக உருவாக்கிவிடலாம். அது போல, எனக்குக் கம்பராமாயணத்தில் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதை போல தோன்றுகிறது. அவ்விதைகளிலிருந்து பல எண்ணங்களும் கேள்விகளும் உயிர்த்தெழுகின்றன. அவ்வெண்ணங்களுக்கும் கேள்விகளுக்கும் வளர்த்தெடுத்து பின்தொடர்ந்து சென்றால், பற்பல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. மேலும் பல பயணங்களை எதிர்பார்த்து...
பி.கு: மனதில் சில கேள்விகள் இன்னும் இருக்கின்றன.
“தாடகை” என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?
கம்பன் ராமாயணத்தை இயற்றும் போது வால்மீகி ராமாயணத்தைப் படித்தோ / கேட்டபின்னரோ இயற்றினாரா? அல்லது துளசிதாசரின் ராமாயணமோ வேறு மொழியில் இயற்றிய ராமாயணத்தை முன்மாதிரியாக வைத்து இயற்றினாரா?
காகுத்தனின் முழுக்கதை என்ன? அதை எங்குப் படிக்கலாம்? கம்பராமாயணத்தில் வேறெங்கும் காகுத்தன் குறிப்பு வருகிறதா?
வால்மீகி ராமாயணத்தில் தாடகை முதலில் ஒரு யக்ஷினி. சாபத்தால் அரக்கியானாள் என வருகிறது. கம்பராமாயணத்தில் இந்த சாபம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?
முதல் வாசிப்பில் இந்த கதை புரியவில்லை. “சிவகாசி” என்ற சாவியை வைத்து தான் இக்கதையை திறக்க முடிந்தது. சிறுவர்களின் இயல்பான விளையாட்டை அற்புதமாக வர்ணித்திருக்கிறார்.
கதை நடுவில் யதார்த்த சித்திரங்களிலிருந்து உருவங்கங்களாக மாறுவது அருமை. கதையின் நடுவில் ஒரு கோடு வரைந்து, இரு பாகங்களாக பிரித்தால், அந்த பாகங்கள் கண்ணாடி பிரதிபலிப்புகளாக இருக்கும் விதத்தில் கதையை அமைத்துள்ளார். ஒரு அற்புதமான Animated Film ஆக இதை எடுக்கலாம். குறிப்பாக கடைசியில் உருவகங்களாக வரும் பத்திகள்.
அவனுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரம் - அசோகமித்திரன்
எளிமையான நடை கொண்ட கதை. இன்றும் பொருத்தமான கதை. சில சமயங்களில் நாம் செய்யும் சிறு செயல்கள் மற்றோருவருக்கு பெரும் துயரை நிகழ்த்தும் வேளையில் நமது மனதில் எழும் குற்ற உணர்ச்சியை கதை மையமாக கொண்டிருக்கிறது.
கு.அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” மற்றும் “இருவர் கண்ட ஒரே கனவு” சிறுகதைகளையும் படித்த பிறகு, அவர் குழந்தைகளின் உலகை சித்தரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குழந்தைகள் நிஜத்தில் எவ்வாறு இருப்பார்களோ, எப்படி பேசுவார்களோ, அப்படியே இவரின் கதைகளிலும் இருக்கிறார்கள். வீடியோ காமிரா வைத்துக்கொண்டு கதை சொல்லியின் அறைக்குள் நுழைந்து குழந்தைகள் அடிக்கும் லூட்டியை பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது இக்கதையின் ஆரம்ப காட்சி.
முனி சரத்குமார் போன்ற தட்டையான சித்தரிப்புகள் இன்று வரும் நிலையில், பல ஆண்டுகள் முன்பாகவே இக்கதை எழுதப்பட்டது ஆச்சரியம். கோமதியின் குடும்பம் அவளை உதறித்தள்ளிவிட்டது என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். கோமதியின் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு என்றெல்லாம் கதை போகாமல், அந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு கோமதியின் மன நிலை புரிவதுடன் கதை முடிகிறது. ஒரு பக்கம் நல்ல முடிவு என்றாலும் இன்னொரு புறம் இது தப்பித்தலோ என்றும் தோன்றுகிறது. நவீன இலக்கியம் முடிவில்லாமல் முடிப்பது என்ற ஒரு நிலைக்கு வந்துவிட்டதில், இப்படியெல்லாம் முடிப்பதே ஒரு போக்காக போயிற்றோ?
எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் அது கருவாக இருக்கும் போது இறந்துவிடுமோ என்ற பதற்றம் எனக்கிருந்ததில்லை. ஆகவே இக்கதையின் அடிநாதத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் மிகை உணர்ச்சியாகவே எனக்கு தோன்றியது. முடிவும் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை.
மாமியாருக்கு அடிபணிந்து போகும் ஒரு அப்பாவி மருமகள். அவள் கடைசியில் போடப்போகும் வோட்டுக்கூட அவளின் மாமியாரின் கை முடிவு செய்வதாக கதை முடிகிறது. வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் மருமகள் நடத்தும் பேச்சுவார்த்தை, வாக்கு சாவடி வெளியே மரத்தில் இருக்கும் கிளியுடன் அவள் நடத்தும் பேச்சுவார்த்தை, வாக்கு சாவடியில் முழு மனிதர்களை காணாமல் வெறும் உடல் உறுப்புகளை மட்டும் காண்பது போன்றவை அற்புதம்!
This book by Douglas Adams is as crazy as The Hitchhiker’s Guide to the Galaxy. The only difference is that while Hitchhiker’s is completely crazy, Dirk Gently is crazy with a more organised plot. Douglas Adams has a wacky sense of humour which I love! It’s best illustrated by the Electric Monk in this book. This is how he describes it.
The Electric Monk was a labour-saving device, like a dishwasher or a video recorder. Dishwashers washed tedious dishes for you, thus saving you the bother of washing them yourself, video recorders watched tedious television for you, thus saving you the bother of looking at it yourself; Electric Monks believed things for you, thus saving you what was becoming an increasingly onerous task, that of believing all the things the world expected you to believe.
In short, it was the electronic version of priests! People consulted it during stressful decision-making moments and it’s meant to comfort them saying they’re doing the right thing, although it may be the worst thing to do. The things this device does throughout the book is hilarious. The best part is that all of us have an Electric Monk embedded deep inside us. In a way, we’re laughing at our own actions.
The other Douglas Adams trait is his love for twisting the genres completely and creating a soup such that you’re stumped if someone asks you about the genre of this book. It starts out like a mystery, then it becomes fantasy, then science fiction, then horror and then a musical! No matter what preconceptions you have when you start to read this book, Adams bashes all of them up and ends up surprising you.
Just as he bashes up genres, he toys with real life events too. I love it when real events are woven into fiction and when real life mysteries are given a fictional cause. For example, let’s say there’s some real life event X and we don’t know what caused it. If I take up that event X and link it up in my fictional narrative and provide a plausible explanation for it, then that’s awesome. However, Douglas Adams takes up a seemingly insignificant real-life mystery and wraps it up into his narrative such that it becomes the central event that saves the entire planet from destruction. That’s right! Beginning as a simple murder mystery, the plot goes on to a stage where the entire human race could get wiped out (something he did within the blink of an eye in the early chapters of Hitchhiker’s!)
It’s a book that will keep rewarding you when you re-read it. I had to re-read several chapters to understand the missing links. Also, once you finish reading the book and read the Kubla Khan poem, you’ll understand how some elements of the narrative are also inspired from the poem. Kubla Khan has the germ of the idea that music can express the beauty of things. The music played by the Abyssinian maid is enough for Coleridge to construct the dome in the air. Likewise the ideas of Richard Macduff in the book, who believes he can compose harmonies from nature. And the three waves of circle which is the alien’s parting gesture is also there in the poem! These little points make you like the book even more!
His flashing eyes, his floating hair!
Weave a circle round him thrice,
And close your eyes with holy dread
For he on honey-dew hath fed,
And drunk the milk of Paradise.
If you’ve read The Rime of the Ancient Mariner already, then you’ll enjoy this book even more! Adams doesn’t care whether it’s Coleridge or Wordsworth or Mozart or Bach - he picks on everyone!
The character of Dirk Gently, the titular character who goes about solving mysteries by believing in the interconnectedness of the universe, is a combination of Doyle’s Sherlock Holmes and Wodehouse’s Ukridge! Here’s what he says about his methods to an old lady who calls him asking why he sent her a huge bill.
“I'm very glad you asked me that, Mrs Rawlinson. The term `holistic' refers to my conviction that what we are concerned with here is the fundamental interconnectedness of all things. I do not concern myself with such petty things as fingerprint powder, telltale pieces of pocket fluff and inane footprints. I see the solution to each problem as being detectable in the pattern and web of the whole. The connections between causes and effects are often much more subtle and complex than we with our rough and ready understanding of the physical world might naturally suppose, Mrs Rawlinson.
Let me give you an example. If you go to an acupuncturist with toothache he sticks a needle instead into your thigh. Do you know why he does that, Mrs Rawlinson?
No, neither do I, Mrs Rawlinson, but we intend to find out. A pleasure talking to you, Mrs Rawlinson. Goodbye.”
And here’s another Dirk Gently quote that takes a dig at Holmes!
“Sherlock Holmes observed that once you have eliminated the impossible then whatever remains, however improbable, must be the answer. I, however, do not like to eliminate the impossible.”
I’ll definitely recommend reading this book no matter which genre you prefer. It’s well worth your time and it’ll definitely open up your imagination. If you want to be a writer, it’ll show you that the possibilities with fiction are truly endless. After all, the process of writing fiction is the same as trying to solve an unsolvable mystery. It is as Dirk Gently says,
“Let us prepare to grapple with the ineffable itself, and see if we may not eff it after all.”
P.S: There’s a comic book adaptation of this book that I’m quite keen to get hold of. I also got to know that there’s a BBC TV series that adapted this book. Keen to watch it after seeing this trailer!
Book #2 - How will you measure your life? - Clayton Christensen
I quit my job to begin 2017 as a VIP. I was given this book as a parting gift and to respect the gesture I thought I should read it. I’m usually quite skeptical of business people and what they say. Especially, people who have smiles like this.
That’s the book’s author Clayton Christensen. Doesn’t it look like a Shutterstock image that comes up when you search for “happy people at work”? You can almost hear him say phrases like “finding meaning in life”, “balancing work and life”, “making the best of your careers”, “living a deep, fulfilling life” etc. I’m not sure why but I’m more drawn to guys like the one below. You see this guy below is called Edgar. His father abandoned him when he was 10, his mother died one year later, his wife died of tuberculosis and he himself was found dead on the streets at the age of 40. I’d love to see Christensen and Edgar discuss “fulfilling life” in heaven.
Anyway, getting to the point, I read through the ten chapters of this book. How will you measure your life? Christensen has some theories and he elaborates on how to apply those theories to businesses and personal life. This book kills two birds with one stone. If you were told that there was a single book that can solve your professional as well as your personal problems, wouldn’t you throw your credit card on the billing counter and kneel down sobbing, “Gimme that book! Please!”?
These self-help books operate with a very simple strategy. They tell you stuff that’s quite obvious. So obvious that you can’t deny them. You’d be a fool if you deny them. And then, they pile up loads of anecdotes, examples and case studies to further elucidate those basic points. For example, let me list out what this book says in each of the 10 chapters.
When someone comes to you with a problem, don’t hand out a ready-made solution. Give a theory and how it’s applied to a particular case. Then, let the person decide how to apply it to his problem.
To find satisfaction at work (or in personal life), there are some basic necessities (like working conditions, pay etc) and motivation (the feeling that your job has a purpose)
Start your business with a strategy but if doesn’t work out, then be ready to change it.
If you claim something is priority, ensure that you allocate resources for it.
Spend time with your family and it will pay off in the long run.
Always ask what problem is a product solving and focus on solving that problem really well.
Don’t outsource your core capabilities. You won’t be future-proof.
Focus on gathering experiences rather than tangible achievements. The experience you get from a failure is of greater value than a certificate of accomplishment or a pay raise.
Clearly define what your company (or family) culture is and think of ways to nurture it. Otherwise a culture will form automatically, which you may not like and it’ll be difficult to change later.
Don’t think of short term gains and fail to see the bigger picture. Once you decide that you stand for something, stick to your values. Don’t compromise saying “just this once”.
Figure out what’s your life purpose. Define it clearly, preferably while you’re in college.
Now, will you refute any of these points? No sane person will deny these points. Are these points obvious? Of course! Are these points always applicable? Maybe... Well, that’s where the trick is. You can definitely think up scenarios in which these points wouldn’t apply. But, you see, those scenarios wouldn’t be in the book. Also, Christensen’s argument is that he isn’t teaching you what to do or what to think. He’s teaching you how to think. He’s not teaching you something you should learn. He’s teaching you how to learn. He’s giving you a framework for you to go ahead and think about your purpose in life. It’s like a filmmaker writing a book not on how to make movies, but on how to think about how your movies should be made #Inception
The other trick that these books do is to invent new phrases to represent simple ideas. I’d like to call it “atomic branding”. (There! Now, I’ve coined a term too!) The tactic is to give a catchy name to an idea in your book. So that way, when someone who reads your book, tries to share the ideas with others, he’ll use that phrase. Since the phrase is unique to your book, it becomes free marketing! This book is littered with such phrases like “good capital bad capital”, “motivators and hygiene factors”, “likeness, commitment & metrics”, “deliberate and emergent strategies”. If you read through the book, you’ll realise these are just fancy names for the simple points I wrote above.
However, this does not mean that I didn’t learn anything from this book. It was an interesting read. It reinforced some of the beliefs I already have. It verbalised some of the inner convictions I’ve already had. Also, the anecdotes were funny, especially because you get to laugh at how stupid people have been. And how many billions of dollars have been lost due to some unbelievably stupid decisions.
Such books strengthen my conviction to read Thirukkural in-depth. Technically, Thirukkural is all of these self-help books rolled into one, minus the case studies. Also, Thiruvalluvar isn’t smiling and the image isn’t from Shutterstock.
Book #1 - Inspector Singh - Singapore School of Villainy
I’ve decided to read more books in 2017 from my ever-growing list of books to read. And write at least a short paragraph about each one. So here we go!
This is the first one I read. Based on the cover design, I thought this will turn out to be a quirky and fun mystery novel. Something along the lines of Nury Vittachi’s Feng Shui detective. But, I was wrong.
The crime isn’t that great a mystery. It’s a whodunit. An ang mo gets bashed up in his office on the top floor of Republic Towers, while awaiting his business partners to arrive for a meeting. The inspector assigned to this case is Shamini Flint’s protagonist - Inspector Singh, an overweight Sikh inspector, who’s hated by his seniors. But, he’s someone they can’t do without when it comes to murder investigations.
However, his investigation proceeds at a snail’s pace and there’s no clear direction or thrill. Inspector Singh’s methods are sloppy to say the least and there are moments when he directly asks the person he’s inquiring if he did the murder or not. That’s like Johnny’s mother asking him to open his mouth to show that he’s not eating sugar. Inspector Singh has absolutely no method and his progress is heavily based on coincidences. There’s nothing wrong in that. Shikari Shambu’s adventures used to be that way. But then, the tone has to be comical and the process of stumbling upon clues must be hilarious or interesting. In this book, it’s neither. There was hardly any moment that was laugh-out-loud or nail-biting.
The book also tries to touch upon some “serious” Singapore issues. But, that’s exactly what it does. It merely touches upon them and doesn’t delve into them deeply. There’s the public perception of maids, government’s partiality to the expatriate community, illegality of gay sex in Singapore, the death sentence and the blind quest for money. They’re all significant aspects of Singapore society that merit proper attention. But, they end up being superficial details due to the inconsistent tone of this book. One moment Inspector Singh is relishing a sumptuous biryani meal, the next moment he’s watching an autopsy, the next moment he’s wondering how people think maids are more likely to commit murder and the next moment he’s thinking how best to express his anger at his wife.
The book’s also filled with dull, boring details that aren’t funny. In a Goodreads review, it was rightly mentioned that it feels like model composition writing. “Describe Annie’s house for 6 marks”. Details are good but only if they’re relevant to the story in some sensible way. The author would do well to heed Hitchcock’s advice.
The Indian stereotypes irked me as well. The gossip-loving wife. Her pride in the dishes she cooks. Her dismissiveness of people of the other race, especially when it comes to marriage. These are partially true, yes. But, that’s what stereotypes are. They’re not complete truths. It’s the danger of the single story as expressed by Adichie in the talk below. The Indian stereotypes in this book pander to a western audience. Inspector Singh’s character is moulded to make a Westerner think he’s a Singaporean Indian, not someone who really is.
To sum up, the problem with this book is that it can’t decide if it wants to be funny or thrilling or serious. As a result, it ends up being none of these. My search for a good mystery novel set against the Singapore backdrop continues...