Sri vijayasana Perumal temple, Natham, Thoothukudi district. அருள்மிகு வரகுணவல்லி சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோயில். நத்தம். நவதிருப்பதி இரண்டாம் தலம். தூத்துக்குடி மாவட்டம். மூலவர்:- விஜயாசன பெருமாள் தாயார்:- வரகுணமங்கை நாச்சியார் உற்சவர்:- எம்மடர் கடிவான் புராண பெயர்:- திருவரகுணமங்கை தீர்த்தம்:- அக்னி தீர்த்தம் கோலம்:- வீற்றிருந்த கோலம் விமானம்:- விஜயகோடி விமானம். 🚩தலவரலாறு:- இந்த குண வர மங்கை திருத்தலத்தில் ரோமசர் என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவனுக்கு சத்தியவான் என்னும் சீடன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை இத்தல தீர்த்தத்தில் நீராடச் சென்றபோது அக்குளத்தில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த கொடியவன் செம்படவன் என்பவனை நாகம் தீண்ட அவன் சொர்க்கம் அடைந்தான். 🚩இதனை கண்ட சத்தியவான் தனது குருவான ரோமசரிடம் சென்று முன்பு கொடுந்தொழில் புரிந்த பாவி எப்படி சொர்க்கம் அடைந்தான் என வினவினான். 🚩 அதற்கு ரோமசர் அவன் பாவத்தை உணர்ந்து சில காலம் வரகுணமங்கை இறைவனை மனமுருகி வழிப்பட்டதாகவும் அதனால் அவன் நற்கதியடைந்ததாகவும் கூறினார். எனவே இத்தலம் பாபத்தைப் போக்கும் முக்கிய தலம் ஆகும். 🚩 ரோமசர் முனிவருக்கும் சத்தியமான கும் இறைவன் காட்சி கொடுத்து திருத்தலம். 🚩 பெருமாளின் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திருத்தலங்களில் இது 82வது வைணவத் தலமாகும். 🚩 நவ திருப்பதிகளில் இது இரண்டாவது திருத்தலம். 🚩 நவகிரகங்களில் இது சந்திர பகவானுக்கு உரிய திருத்தலம். 🚩 திருமகள் பிராட்டி வரகுணமங்கை நாச்சியார் எனும் திருநாமத்துடன் காட்சி தரும் திவ்ய தேசம். 🚩 நம்மாழ்வார் பாசுரம் பாடிய திவ்ய தேசம். Follow us @vigneshavmm #iskcon #iskcontemple #iskconworld #radhakrishna #bhakti #radharani #vrindavan #iskcondarshan #radheradhe #mathura #radhekrishnaworld #lordkrishna #dailydarshan #radhekrishna #krishna #krishnaquotes #harekrishna #radhekrishnalove #love #radhe #jaishreekrishna #govind #mahadev #venkateswara #hindu #omnamovenkateshaya #balaji (at Vijayasana Perumal, Natham) https://www.instagram.com/p/CVvFKTmP9gQ/?utm_medium=tumblr












