திருப்பதியில் பெரும் பக்தர் கூட்டம் – சர்வ தரிசனத்திற்கு 15 மணி நேரம் வரை காத்திருப்பு
ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் பக்தர்கள் பெரும் திரளாக வந்து சேர்வதால் சர்வ தரிசனத்தில் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி, சர்வ தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 முதல் 15 மணி நேரம் வரை வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அன்று மொத்தம் 77,893 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். இதில் 24,604 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.3.53 கோடியாக பதிவாகியுள்ளது.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பிய நிலையில், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கே 5 மணி நேரத்திற்கு மேல், நடைபாதையாக வந்தவர்களுக்கு 8–10 மணி நேரம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 2–3 மணி நேரம் வரை காத்திருப்பு நேரம் இருந்தது.
இந்த நிலை, பண்டிகை கால கூட்டத்தை ஒத்த அளவுக்கு பக்தர்கள் வருகை தருவதை காட்டுகிறது.







