அண்ணாந்து பார்க்க வைத்த சிறுமை
A city is not gauged by its length and width, but by the broadness of its vision and the height of its dreams.
Herb Caen
ஏறத்தாழ 3000 கோடி செலவில் படேலுக்கு நர்மதா நதியில் உலகிலேயே உயரமான சிலையை நிர்மாணித்து உள்ளது பாரதிய ஜனதா அரசு.
இந்த 3000 கோடிக்கு வேறு என்ன என்ன செய்ய முடியும் என்று அனைவரும் ஏற்கனவே பட்டியலிட்டு விட்டார்கள்.
இப்படி ஒரு செலவீனம் இந்தியா போன்ற வளர்ந்து வரும், 70% ஏழைகளை கொண்ட நாட்டிற்கு கண்டிப்பாக தேவை இல்லைதான்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆர்எஸ்எஸ் என்பது கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டிய இயக்கம் என்று கூறிய படேலுக்கு இந்த அரசு சிலை அமைத்து தான் இங்கு நகைமுரண்.
பாவம் ஆர்எஸ்எஸ் நிறுவனத்தில் எவரேனும் ஒரு படேல் போலவோ ஒரு அம்பேத்கர் போலவோ அல்லது ஒரு பகத்சிங் போலவோ யாராவது இருந்தால் அவர்கள் ஏன் மாற்றுக் கருத்துள்ள பழந்தலைவர்களை இன்று தூக்கிப்பிடிக்க போகிறார்கள்.
மன்னிப்பு கடிதம் எழுதுவதற்கும் மதவெறியை பரப்புவதற்கும் காலத்தை செலவழித்த நிறுவனத்திற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. இது காலம் தந்த தண்டனை.








