பிரம்பணன் இந்து கோவிலில் செதுக்கப்பட்ட புத்த சின்னங்கள்?
Hey guys, இன்னிக்கு நாம இந்தோனேசியாவோட ரொம்ப பெரிய இந்து கோவிலப் பார்க்கப் போறோம். இத ப்ரம்பணன் கோயில் ன்னு சொல்றாங்க, இது குறைஞ்சது 1,200 வருஷங்கள் பழமையானது. வாங்க, அதுல என்ன இருக்குன்னு பார்ப்போம். ப்ரம்பணன் கோயில் தென்கிழக்கு ஆசியாவுலயே ரெண்டாவது பெரிய இந்து கோயில். இது போரோபுதூருக்கு அடுத்தபடியா இந்தோனேசியாவோட ரெண்டாவது பெரிய கோயில், இது தான் இந்தோனேசியாவுலயே ரொம்ப உயரமான கோயிலும்கூட.
இப்ப, ப்ரம்பணன் கோவிலப் பத்தின ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு. 17 வருஷங்களுக்கு முன்னால, பழமையான ப்ரம்பணன் கோவில் ல ஒரு விசித்திரமான விஷயம் நடந்தது. மே 27, 2006 அன்னிக்கு அதிகாலைல, நேரம் விடியற்காலம் 5:55 மணி , அது சனிக்கிழமைங்கறதால, கூட்டமும் அதிகமாக இருந்தது. ப்ரம்பணன் கோயிலுக்கு வெளிய எக்கச்சக்கமான டூரிஸ்ட்டுகள் காத்துட்டு இருந்தாங்க, அவங்கள்ல சிலர் ஏற்கனவே டிக்கெட் வாங்கிட்டவங்க. எல்லாரும் ப்ரம்பணன் கோயிலுக்குள்ள வரதுக்கு விரும்பி தயாரா இருந்தாங்க. ஆனா, சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்ள வரதுக்குத் தயாராகிட்டிருந்தப்போ, இந்த இடத்துல ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுது, ப்ரம்பணன் கோயிலத் தாக்கின 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தப் பத்தி தான் இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கோம். நிஜமா, நீங்க அந்த கோயில் கோபுரத்தப் பாத்தீங்களா?
கோயில் கோபுரத்துக்கு ஒரு மேற்பகுதி இருக்கு பாருங்க. கூம்பு மாதிரி ஒரு உச்சி. அத ரத்னா ன்னு சொல்லுவாங்க, ஆனா, இந்த கோயில் கோபுரத்துல அது இல்ல. கவனிச்சீங்களா? அந்த இடம் காலியா இருக்கு பாருங்க. இது ஏன் காலியா இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன் தெரியுமா? பூகம்பத்துனால தான் . இப்போ, அந்த மேல் பகுதி பீஸ் எங்க? நான் உங்களுக்குக் காட்டறேன் வாங்க. சரி, இந்த ரத்னா அதாவது கலசம் - அந்தக் கோயிலோட மேல் பகுதி - பூகம்பத்தால கீழ விழுந்துடுச்சு, இன்னிக்கு அவங்க அத, இங்க ஒரு நினைவுச்சின்னமா விட்டுட்டு, என்ன நடந்தது ங்கறத சொல்ற ஒரு செய்திப்பலகைய இங்க வச்சிருக்காங்க.















