நாகலோகம் உண்மையில் இருக்கிறதா? நாகர்களின் மர்ம குகை கண்டுபிடிப்பு!!
Hey Guys, நாகர்கள் எங்க ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க? ஆமா, இது நாகலோகத்தோட உண்மையான காட்சிகள், இங்கதான் நாகர்கள் நிலத்தடியில வாழறதா சொல்றாங்க , அதுவுமில்லாம, இது வழியா தான் இந்த ஊர்வன மாதிரியான உயிரினங்கள் பாதாள உலகத்துல இருந்து பூமியோட மேல் பரப்புக்கு வருது. இந்த இடத்தோட பேர் என்ன? இத லுபாங் நெகலோகா ன்னு சொல்றாங்க, லுபாங் ங்கற வார்த்தைக்கு துளை ன்னும், நெகலோகா ன்னா நாகர்களோட பரிமாணம் இல்லேன்னா உலகம் னும் அர்த்தம். நாகலோகம் ங்கற வார்த்தை நிறைய பழங்கால நூல்கள்ல குறிப்பிடப்பட்டிருக்கு , இங்கதான் ஊர்வன மாதிரியான உயிரினங்கள் வாழ்ந்துட்டு இருக்கு .
இந்த இடம் கூகிள் வரைபடத்துல லுபாங் நெகலோகா அல்லது நாகா பாதாள உலகத்து துளை ங்கற பேர்ல காணப்படுது. லுபாங் என்ற வார்த்தைக்கு துளை ன்னு அர்த்தம், நெகலோகா ங்கற வார்த்தை நாகலோகா ங்கற சமஸ்கிருத வார்த்தையோட மாறின வடிவம் தான். நாகலோகம் தொலைதூரத்துல இருக்கிற ஒரு மலை உச்சியில மறைஞ்சு இருக்கு, மனுஷங்க அது கிட்ட போறது கிட்டத்தட்ட சாத்தியமில்லாதது, இது இந்தோனேசியாவோட பாலியில இருக்கு.
பாலினீஸ் மக்கள் இங்கதான் நாகர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு உறுதியா நம்பறாங்க, இத ஒரு புனிதமான இடமாவும் நினைக்கிறாங்க. சில உள்ளூர்காரங்க சொல்றபடி, இது கர்ப்பப்பை, அடர்ந்த காடுகளால சூழப்பட்ட பிறப்பு வழி, நாகர்கள் மனிஷ உலகத்தப்பாக்க இந்த வழியில இருந்து தான் வெளிய வராங்க. இங்க எத்தன நாகர்கள் வாழறாங்க? உள்ள நிறைய நாகர்கள் இருக்கறதா மட்டுமில்ல, அவங்க நரமாமிசம் சாப்பிடறதாவும் நாட்டுப்புறக் கதைகள் சொல்லுது, அதாவது அவர்கள் ஒருத்தர ஒருத்தர் சாப்பிடுவாங்களாம். தன்னோட உருவத்த மாத்திக்க முடிஞ்ச அந்த ஊர்வனவுக்கு காணிக்கையா, நாகலோகத்துக்குள்ள கல் எறியறது உள்ளூர்வாசிகளோட பொதுவான சடங்கு.













