Hey guys, இன்னைக்கு நாம வாரங்கல் gates அப்படின்ற இந்த இடத்த பத்தி தான் பாக்க போறோம். இந்த பழங்கால structures எல்லாம் வெறும் entrance gatesஓ இல்ல கதவுகளோ இல்லன்றது நமக்கு நல்லா தெரியும். இத எதுக்காக கட்டியிருப்பாங்கன்னு நம்மளால இப்ப புரிஞ்சிக்க முடியுதான்னு பாப்போம். நெறைய experts இந்த structuresஅ எல்லாம் சரியா ஆராய்ச்சி பண்ணல, ஆனா நாம அத பத்தி இன்னிக்கி கொஞ்சம் கவனமா பாக்க போறோம். இந்த entranceக்கு மேல ஒரு நேரான வெட்டு ஒன்னு இருக்கு பாருங்க. கிட்டத்தட்ட ஒரு laser வெட்டு மாதிரியே அது இருக்கு. சரியா நடுவுல இருக்கு. அதோட அது வழியா சூரிய வெளிச்சம் நல்லா பளிச்சுன்னு வருது. ஆரம்பத்துல, இது சிற்பியோட தப்பா இருக்கும்ன்னு தான் நான் நெனச்சேன். ஆனா இந்த ஓட்டைய, தெரிஞ்சேதான் அந்த 4 வாசல்லயும் போட்டிருக்காங்க. இந்த ஓட்டைகள கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குன்னு எல்லா entranceலயும் பாக்கலாம். ஆனா இதெல்லாம் ஒரே மாதிரி இல்ல. இந்த entranceகளோட உச்சில, இந்த சாவிதுவரம் அதாவது இந்த keyhole... இனிமே இத நான் keyholeன்னு தான் சொல்லப்போறேன். Keyhole மாதிரி ஓட்டைகள் இருக்கு பாத்திங்களா?